- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் வடிவேலு மீது எனக்கு வருத்தம் இருந்தது உண்மைதான் - கேங்கர்ஸ் பட விழாவில் உண்மையை...

நடிகர் வடிவேலு மீது எனக்கு வருத்தம் இருந்தது உண்மைதான் – கேங்கர்ஸ் பட விழாவில் உண்மையை போட்டுடைத்த இயக்குனர் சுந்தர் சி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களான அரண்மனை 4 மதகஜ ராஜா படங்களை தொடர்ந்து அடுத்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வருகிற 24ம் தேதி கேங்கர்ஸ் படம் ரிலீஸாகிறது. இயக்குனர் சுந்தர் சி நாயகனாக நடித்து இயக்கிய இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பின், சுந்தர் சியுடன் நடிகர் வடிவேலு இணைந்து நடித்திருக்கிறார்.

தலைநகரம் வின்னர் ரெண்டு உள்ளிட்ட பல படங்களில் சுந்தர் சி வடிவேலு காம்போ பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதன்பிறகு வடிவேலு நடித்த ஒரு படத்தில் நடிகர் சந்தானத்தை சுந்தர் சி நடிக்க வைத்ததால் அந்த விவகாரத்தில் வடிவேலு சுந்தர் சி இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் இப்போது மீண்டும் இணைந்திருக்கின்றனர்.

- Advertisement -

கேங்கர்ஸ் படம் வருகிற 24ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சென்னையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் சுந்தர் சி பேசியதாவது, நானும் வடிவேலுவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறோம். 2003ம் ஆண்டில் வடிவேலுவுடன் எனது பயணத்தை தொடங்கினேன்.

ஒரு நடிகர் இப்படி நடிக்க முடியுமா என்று இன்னும் அவரைப் பார்த்து நான் வியந்து கொண்டிருக்கிறேன். படத்தில் ஒரு சாதாரண காட்சியாக இருந்தால் கூட அதற்கு அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் அற்புதமாக இருக்கும். நடிப்பில் லெஜெண்ட் என்று சொன்னால் அது வடிவேல் சார் தான்.

- Advertisement -

ஒரு காட்சிக்கு நான் 10 சதவீதம் யோசித்தால் போதும் மீதி 90 சதவீதம் அவரே நடிப்பில் படத்தை சிறப்பாக்கி விடுவார். அதனால் எல்லா நடிகர்களுக்கும் இவர் மாஸ்டர் கிளாஸ் என்று சொல்லலாம். ஒரு மனிதன் இத்தனை வருடங்களாக சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

வடிவேலு மீது எனக்கு ஒரே ஒரு வருத்தம் இருந்தது. அவர் இடையில் கொஞ்சம் நடிக்காமல் இருந்தார். அந்த கேப்பில் அவர் நடித்திருந்தால் இன்னும் எத்தனை படங்களில் நாம் அவரை ரசித்து இருப்போம். இனிமேல் அவரைப் பார்த்து சிங்கம் களத்தில் இறங்கிவிட்டது என எல்லாரும் சொல்ல வேண்டும் என்று இயக்குனர் சுந்தர் சி அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்