- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் மனோபாலா கடைசியாக சொன்ன அந்த வார்த்தை, என்னால் மறக்க முடியவில்லை - உருக்கமாக பேசிய...

நடிகர் மனோபாலா கடைசியாக சொன்ன அந்த வார்த்தை, என்னால் மறக்க முடியவில்லை – உருக்கமாக பேசிய இயக்குனர் சுந்தர் சி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் என நடிப்பில் அசத்தியவர் நடிகர் மனோபாலா. இவர் ஒரு சினிமா இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாது. ஊர்க்காவலன் மல்லுவேட்டி மைனர் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் வெற்றிப்படிகள் சிறைப்பறவை மூடு மந்திரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

ஆரம்பத்தில் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி மனோபாலா பிறகு படங்களில் காமெடி குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் குறிப்பாக சுந்தர் சி இயக்கிய படங்களில் மனோபாலா நடிப்பது வழக்கமாக இருந்தது. அவரது காமெடி நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

சமீபத்தில் வெளியான மதகஜ ராஜா படத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் அவர் சடலமாக நடித்த காட்சி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதே போல் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை அரண்மனை 2 அரண்மனை 3 படங்களிலும் மனோபாலா நடிப்பு ரசிகர்களுக்கு பயங்கர சிரிப்பை வரவழைத்தது.

சுந்தா் சி இயக்கத்தில் மிர்சி சிவா விமல் அஞ்சலி ஓவியா நடித்த கலகலப்பு படத்தில், அஞ்சலியை மனோபாலா ஜீப்பில் கடத்திச் செல்லும் காட்சியும், அப்போது சந்தானம் மனோபாலாவை கலாய்க்கும் காட்சிகளும் இப்போதும் இணையத்தில் டிரண்டிங்கில் இருந்து வருகிறது. துரதிஷ்டவசமாக நல்ல திரை கலைஞராக மனோபாலா, சில ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டார்.

சமீபத்தில் நடிகர் மனோபாலா குறித்து இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, நான் இயக்கிய அரண்மனை 4 படத்தில் மனோபாலா நடிக்காதது எனக்கு மிகப்பெரிய இழப்பு. இந்த படத்தில் அவருக்கு என ஒரு முக்கியமான கேரக்டர் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் மனோபாலாவிடமிருந்து ஒரு பெரிய மெசேஜ் வந்தது.

அதாவது நான் மருத்துவமனையில் இருக்கிறேன். என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. எனவே இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது. எனக்கு பதிலாக அரண்மனை 4 படத்தில் வேறொருவரை நடிக்க வைத்துக் கொள். நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன் என்று அவர் கூறியிருந்தார். இப்போது வரை அவர் கூறிய அந்த வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை என்று இயக்குனர் சுந்தர் சி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

சற்று முன்