- Advertisement -
Homeபொழுதுபோக்குதூறல் நின்னு போச்சு படம் பார்த்த எம்ஜிஆர், அருகில் பதட்டமாக இருந்த இயக்குனர் கே...

தூறல் நின்னு போச்சு படம் பார்த்த எம்ஜிஆர், அருகில் பதட்டமாக இருந்த இயக்குனர் கே பாக்யராஜ் – அந்த காட்சியை பார்த்தவுடன் எம்ஜிஆர் காட்டிய ரியாக்‌ஷன்!

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ், புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகராக இருந்தவர். அதனால் தனது படங்களில் அவரது புகைப்படங்களை, பாடல் காட்சிகளை காட்டுவது வழக்கம். தனது படங்களை எம்ஜிஆரை பார்க்க வைத்து, ரசிக்க வைப்பார். எம்ஜிஆரே எனது கலையுலக வாரிசு என கே பாக்யராஜை ஒருமுறை அறிவித்திருந்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் கூறியதாவது, தூறல் நின்னு போச்சு படத்தில் என் சோக கதைய கேளு தாய்க்குலமே என்ற பாடல் வரும். அந்த பாடலுக்கு முன்பாக நம்பியார் பாடும் தொகையறா போல சில வரிகள் வரும்.

- Advertisement -

அதில் மன்னாதி மன்னனை எல்லாம் பார்த்தவன் நான், அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான் என்று நம்பியார் பாடுவது போல வரிகள் வரும். மன்னாதி மன்னன் மதுரை வீரன் என்றால் அது எம்ஜிஆர் தான். இது எல்லோருக்குமே தெரியும். எனவே எம்ஜிஆரை தாக்குவது போல இது இருக்கிறது. இது வேண்டாம் என உதவி இயக்குனர்கள் என்னிடம் கூறினார்கள்.

நம்பியார் பல படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தவர். அவர் அப்படி பாடுவதுதான் சரியாக இருக்கும். காமெடியா எடுத்துக்குவாங்க. எம்ஜிஆர் பார்த்தாலும் தப்பாக நினைக்க மாட்டார். அவரை பற்றி எனக்கு தெரியும். பேசாமல் இருங்கள் என்று உதவி இயக்குனர்களை சமாதானப்படுத்தி விட்டு அந்த காட்சியை எடுத்துவிட்டேன்.

- Advertisement -

அந்த படத்தை எம்ஜிஆர் பார்த்த போது, அவருக்கு அருகில் நான் அமர்ந்திருந்தேன். அந்த பாடல் காட்சி வந்தது. எனக்கு மனசுக்குள் பயமாகவும் இருந்தது. ஏனென்றால் அந்த பாடல் காட்சி எடுக்கும்போது மற்றவர்கள் சொன்னது எல்லாம் என் நினைவுக்கு வந்து விட்டது. எம்ஜிஆர் படத்தையே பார்த்துக்கிட்டு இருக்கிறார்.

மன்னாதி மன்னனை எல்லாம் பார்த்தவன்டா என்று நம்பியார் பாடியவுடன் சிரித்த எம்ஜிஆர், அடுத்து அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான் என்ற வரியை கேட்டவுடன் என் தொடையை தட்டி எப்படி இப்படி என்று பாராட்டிய எம்ஜிஆர் அந்த காட்சியை ரசித்து ரசித்து சிரித்தார் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்