- Advertisement -
Homeபொழுதுபோக்குமற்றவர்களுக்கு பணத்தை நான் அள்ளி கொடுத்தேன்… அப்போது சிம்பு என்னை பார்த்து கேட்ட அந்த கேள்வி...

மற்றவர்களுக்கு பணத்தை நான் அள்ளி கொடுத்தேன்… அப்போது சிம்பு என்னை பார்த்து கேட்ட அந்த கேள்வி – கண்ணீர் விட்டு அழுததாக சொன்ன நடிகர் டி ராஜேந்தர்!

- Advertisement -

கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக ரசிகர்களின் மனங்களை வென்றவர் டி ராஜேந்தர். அவர் இயக்கத்தில் வெளியான ஒரு தலை ராகம் தங்கைக்கோர் கீதம் ரயில் பயணங்களில் என் தங்கை கல்யாணி உயிருள்ள வரை உஷா மைதிலி என்னை காதலி என அவரது படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன.

நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் பாடகர் கவிஞர் திரைக்கதை ஆசிரியர் என பன்முக தன்மை கொண்ட அஷ்டவதானியாக தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் டி ராஜேந்தா். அன்று முதல் இன்று வரை தனது படங்களில் நாயகியை தொடாமல் நடித்த ஒரே நடிகர் டி ராஜேந்தர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

- Advertisement -

அவரது இயக்கத்தில் உருவான உயிருள்ளவரை உஷா படம் கடந்த 6ம் தேதி நேற்று ரி ரிலீஸ் செய்யப்பட இருந்தது. ஆனால் தனது மகன் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படம் ரி ரிலீஸ் நேற்று செய்யப்பட்டதால் தனது உயிருள்ள வரை உஷா படத்தை வருகிற 13ம் தேதி தள்ளி வைத்திருக்கிறார் அவரது அப்பா டி ராஜேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் டி ராஜேந்தர் கூறியதாவது, நான் சம்பாதித்ததில் பாதிக்கு மேல் தர்மம் செய்திருக்கேன் தர்மம். இதை வெளியே சொன்னது இல்லை. இது வெளியே மக்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அமெரிக்கா போய் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வந்து இன்னிக்கு மைக் முன்னாடி நின்னு நான் பேசறேன். அதுக்கு காரணம் நான் செஞ்ச தர்மம். நான் சேர்த்து வைத்த புண்ணியம்.

- Advertisement -

அதுதான் கடைசியாக போகும் போது அந்த புண்ணியம்தான் கூடவே போகும்.
அந்த புண்ணியத்தை தான் என் மகன் சிம்புவுக்கு நான் கத்துக் கொடுத்தேன். சின்ன வயசுல நான் தியேட்டர்காரங்க கிட்ட வாங்கிய பணத்தை எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்கறதை என் பையன் சிம்பு பார்த்துட்டே இருந்தான். என்கிட்ட வந்து எல்லோருக்கும் பணம் கொடுக்கறியே? எனக்கு பணம் தருவியான்னு கேட்கறான். அந்த பை நிறைய பணம் இருக்குதுன்னான். எடுத்துக்கோ என்று சொன்னேன்.

இந்த பணத்துல சாக்லேட் வாங்கிக்க போறியான்னு கேட்டேன். இல்லே, நீங்க எல்லாருக்கும் கொடுத்தீங்க, அதே மாதிரி நானும் கொடுக்க போறேன்னு சொன்னான். சரின்னு நான் உள்ளே போயிட்டு கதவு திறந்துவிட்டு பார்க்கறேன். அவன் எல்லோருக்கும் அப்படியே பணத்தை எண்ணிக்கூட பார்க்காம கட்டு கட்டா பணத்தை எடுத்துக் கொடுக்கறான். அதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன். இது கற்பனையாக சொல்லவில்லை. நடந்த நிஜம் என்று டி ராஜேந்தர் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்