- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடரும் விமர்சனங்களுக்கு பதில்… விஜய் கட்சியில் நான் இணைந்தது ஏன்? காமெடி நடிகர் தாடி பாலாஜி...

தொடரும் விமர்சனங்களுக்கு பதில்… விஜய் கட்சியில் நான் இணைந்தது ஏன்? காமெடி நடிகர் தாடி பாலாஜி தந்த விளக்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் தாடி பாலாஜி. முன்னணி நடிகர்களின் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் நிலாவே வா லவ்டுடே உள்ளிட்ட பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். வாலி படத்தில் விவேக், தாடி பாலாஜி காமெடி பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி டிவி சீரியல்களில் அதிகமாக தாடி பாலாஜி நடித்திருக்கிறார். டிவி சேனல்களில் ரியாலிடி ஷோக்களில் நடுவர்களில் ஒருவராகவும் பங்கேற்று வருகிறார். விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தாடி பாலாஜி ஒருமுறை போட்டியாளராக பங்கேற்றார்.

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி நடத்தி வரும் நிலையில், அந்த கட்சியில் நடிகர் தாடி பாலாஜி தன்னை இணைத்துக் கொண்டார். அவர் விக்கிரவாண்டியில் நடத்திய தவெக கட்சி மாநாட்டிலும் பங்கேற்றார். சமீபத்தில் தனது மார்பு பகுதியில் விஜய் உருவத்தை டாட்டூஸ் செய்து, என் நெஞ்சில் குடியிருக்கும்… என்றும் தாடி பாலாஜி எழுதிக்கொண்டது பெரிய பரபரப்பை இணையத்தில் ஏற்படுத்தியது.

தவெக கட்சியில் தாடி பாலாஜிக்கு கட்சி பதவி பொறுப்பு எதுவும் விஜய் தராததால் அவர் கடுமையான மன உளைச்சலில் தவிக்கிறார் என்பது போன்ற விமர்சனங்கள், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு பதிலளித்து நடிகர் தாடி பாலாஜி வீடியோ ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளார். அதில் விமர்சனங்களுக்கு தாடி பாலாஜி விளக்கமாக பதில் தந்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வீடியோவில் நடிகர் தாடி பாலாஜி கூறியதாவது, நான் தவெக கட்சியில் சேர முக்கிய காரணம், அந்த கட்சியில் நான் பணி செய்ய காரணம் தலைவர் விஜய் எனக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அந்த நன்றி கடனை ஏதாவது ஒரு விதத்தில் அவருக்கு நான் செய்ய நினைக்கிறேன்.

நான் தவெக கட்சியில் பதவியை எதிர்பார்த்தோ அல்லது எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றோ அந்த கட்சியில் நான் பணிசெய்யவில்லை. சிலர் இதை விவாதப் பொருளாக்கி பேசிக்கொண்டு இருக்கின்றனர். நான் நெஞ்சில் டாட்டூஸ் குத்தியதை கலாய்க்கின்றனர். நான் நெஞ்சில்தான் குத்தியிருக்கிறேன். மற்றவர்கள் போல முதுகில் குத்துகிற ஆள் கிடையாது. என்னை பற்றி எதுவுமே தெரியாமல் என்னை பற்றி சிலர் பேசுவதே தவறு என்று தாடி பாலாஜி அந்த வீடியோவில் விளக்கம் தந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்