- Advertisement -
Homeபொழுதுபோக்குபக்கத்து வீட்டுக்காரங்க இருக்கிறாங்க பளபளப்பா… அமர்க்களமா… ஆனா என் வீடு தமிழ் சினிமா ஏன் இப்படி...

பக்கத்து வீட்டுக்காரங்க இருக்கிறாங்க பளபளப்பா… அமர்க்களமா… ஆனா என் வீடு தமிழ் சினிமா ஏன் இப்படி இருக்குது? – அடுக்குமொழி பேசி ஆதங்கப்பட்ட இயக்குனர் டி ராஜேந்தர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக இசையமைப்பாளராக பாடல் ஆசிரியராக கதை ஆசிரியராக வசனகர்த்தாவாக அஷ்டவதானி என அழைக்கப்பட்டவர் டி ராஜேந்தர். கடந்த 1980களில் டி ராஜேந்தர் இயக்கிய படங்கள் எல்லாமே வெள்ளிவிழா படங்கள்தான். இப்போதும் அவரது பொன்னான மனசே பூவான மனசே பாடல் கேட்டால் மனதை கொள்ளை கொள்ளும்.

ஒரு தலை ராகம் உயிருள்ளவரை உஷா மைதிலி என்னை காதலி என் தங்கை கல்யாணி தங்கைக்கோர் கீதம் உறவைக் காத்த கிளி என டி ராஜேந்தர் இயக்கிய ஒவ்வொரு படமும் சிறந்த படைப்புகளாக ரசிகர்களின் மனங்களை வென்றவை. இப்போது அவரது மகன் சிலம்பரசனும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தில் இருந்து நட்சத்திர நடிகராக நடித்து வருகிறார்.

- Advertisement -

எப்போதுமே ஒரு நல்ல திரைக் கலைஞனாக தமிழ் சினிமா மீது தனது அக்கறையை வெளிப்படுத்தி வருபவர் டி ராஜேந்தா். இப்போதும் குணச்சித்திர கேரக்டர்களில் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஒரு படத்தை இயக்கவும் அவர் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமா குறித்து தனது ஆதங்கத்தை வருத்தத்தை டி ராஜேந்தா் வீடியோ ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் வீடியோ ஒன்றில் இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் தனது பாணியில் அடுக்குமொழியில் பேசியிருப்பதாவது, கன்னட படம் காந்தாரா ஓடுது தாறுமாறா. ஆனால் தமிழ் படம் ஏன் இப்படி ஆகிறது நேர்மாறா. மலையாள படம் ஓடுது கலக்குது லோகா. ஆனா இங்கு தமிழ் திரையுலகம் ஆவுது வீக்கா. ஆனா இங்கு தமிழ் திரையுலகம் ஆகுது ஷாக்கா.

- Advertisement -

கேட்ட பட்ஜெட் பத்தலேன்னு சொல்லிட்டு இருக்க கூடாது சாக்கா. படம் எடுக்கிறது என்ன ஒரு ஜோக்கா. கதாநாயகனின் கால்சீட்டுக்காக புடிச்சுகிட்டு இருந்தா போதாது காக்கா. டெய்லர்ன்னு சொன்னா துணியில போடத் தெரியும் டாக்கா, தயாரிப்பாளர்ன்னு சொன்னா படம் எடுக்க தெரியணும் நேக்கா. மலையாளம் கன்னடம் தெலுங்கு படங்கள் ஓடுவதைப் பார்த்து எனக்கு பொறாமை இல்லை.

பக்கத்து வீட்டுக்காரங்க பளபளப்பா அடுத்த வீட்டுக்காரங்க அட்டகாசமா அண்டை வீட்டுக்காரங்க அமர்க்களமா இருப்பதைப் பார்த்தால் எனக்கு ஆனந்தம். அதே நேரத்தில் என் வீடு என் தமிழ் சினிமா இப்படி இருக்கிறது என்பது எனக்கு ஆதங்கம் என்று அந்த வீடியோவில் அடுக்குமொழியில் பேசி தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் டி ராஜேந்தர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்