- Advertisement -
Homeபொழுதுபோக்குசிறை படத்தில் அந்த காதலர்கள் வாழ்க்கையில் இணைந்தார்கள்… ஆனால் உண்மையில் அப்படி நடந்ததா? - இயக்குனர்...

சிறை படத்தில் அந்த காதலர்கள் வாழ்க்கையில் இணைந்தார்கள்… ஆனால் உண்மையில் அப்படி நடந்ததா? – இயக்குனர் தமிழ் சொன்ன பதிலால் திடுக்கிட்ட ரசிகர்கள்!

- Advertisement -

கடந்தாண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் 25ம் தேதி வௌியான படம் சிறை. அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு எல்கே அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் கதையை டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் எழுதியிருந்தார்.

இந்த படத்தில் வரும் காதலன் காதலி கதாபாத்திரங்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள். இயக்குனர் தமிழ் ஆரம்பத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்தவர். பிறகு அந்த பணியை விட்டு விலகி சினிமாவுக்குள் வந்தவர். அவரது வாழ்க்கையில் சந்தித்த அந்த கேரக்டர்களை தான் சிறை படத்தில் தனது கதை வடிவில் கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

சிறை படத்தில் வரும் காதல் கதை உண்மையில் நடந்ததுதான். ஆனால் படத்தில் கதைப்படி கிளைமாக்ஸில் முஸ்லிம் மதம் சார்ந்த காதலனும் இந்து மதம் சார்ந்த காதலி இருவரும் இணைந்து விடுவது போல் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மை காதலர்கள் வாழ்க்கையிலும் அது நடந்தததா என்பது குறித்து இயக்குனர் தமிழ் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் தமிழ் கூறியதாவது, நான் வேலூர் சிறைச்சாலையில் இருந்து கைதிகளை நீதிமன்றம் அழைத்துச் செல்லும் பொறுப்பு காவலராக இருந்தேன். அப்போதுதான் அந்த உண்மையான காதலனை நான் அழைத்துச் சென்றேன். அவர் இந்து. நீதிமன்றத்தில் அந்த பையனைக் காண அவனுடைய காதலி வருவார்.

- Advertisement -

5 ஆண்டுகளாக இப்படியே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எப்படியாவது அவர்களை நீதிபதியிடம் பேச வைக்க வேண்டும் என்று முயற்சித்தேன். ஆனால் அதற்குள் எனக்கு பணியிட மாற்றம் கிடைத்துவிட்டது. என் நண்பரிடம் அந்த பையன் குறித்து சொல்லிவிட்டு வந்தேன்.

ஆனால் பணி அழுத்தங்களால் அந்த காதலர்களை உண்மையில் நான் மறந்து விட்டேன். அதனால் நிஜ வாழ்க்கையில் உண்மையான அந்த காதலர்கள் என்ன ஆனார்கள்? ஒன்று சேர்ந்தார்களா சேரவில்லையா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை என்று இயக்குனர் தமிழ் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று ரூ. 32 கோடி வரை வசூலிக்க காரணம். அந்த கதையில் வரும் உண்மை சம்பவங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்