- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து படத்தில் நடிக்க மறுத்த நடிகைகள், அதனால் 6 மாதங்கள் லேட் - ஆதங்கப்பட்ட...

லப்பர் பந்து படத்தில் நடிக்க மறுத்த நடிகைகள், அதனால் 6 மாதங்கள் லேட் – ஆதங்கப்பட்ட படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அத்தி பூத்தது போல எப்போதாவது நல்ல கதை அம்சம் உள்ள சிறந்த படங்கள் திரைக்கு வருவது உண்டு. அந்த வரிசையில் காக்கா முட்டை பார்க்கிங் சித்தா லப்பர்பந்து குடும்பஸ்தன் குட்நைட் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட சில படங்கள் வரை குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த வரிசையில் வரும் படங்களை எப்போதுமே ரசிகர்கள் கொண்டாட தயங்குவதில்லை.

இதில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் லப்பர் பந்து. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றது. அட்டகத்தி தினேஷ் ஹரீஷ் கல்யாண் சுவாசிகா சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பாலசரவணன் காளி வெங்கட் டிஎஸ்கே உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

லோக்கல் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹரீஷ் கல்யாண் கிரிக்கெட் வீரர்களாக நடித்திருந்தனர். இதில் கதாநாயகியின் அப்பாவாக அட்டகத்தி தினேஷ் நடித்திருந்தார். அவரது மகளை காதலிக்கும் கேரக்டரில் ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தார். இருவருக்கும் கிரிக்கெட்டில் ஏற்படும் மோதல் சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். இதுதான் சுவாரசியமான கதைக்களமாக இருந்தது.

மேலும் லப்பர் பந்து படத்தில் ஹரீஷ் கல்யாணின் அம்மாவாக தேவதர்ஷினியும் அவரது குடிகார நண்பராக ஜென்சன் திவாகரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து படத்துக்கு வலிமை சேர்த்திருந்தனர். இந்த படம் யதார்த்தமான கதைக்களத்தில் ரசிகர்கள் விரும்பிய ஒரு திரைவடிவமாக வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது. அட்டக்கத்தி தினேஷ் ஹரீஷ் கல்யாண் மற்றும் சுவாசிகா ஆகியோருக்கு இந்த படம் ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்தது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பங்கேற்ற போது அவர் பேசியதாவது, சுவாசிகா இல்லை என்றால் லப்பர் பந்து படம் வந்திருக்காது. இந்த படத்தின் கதையை பல நடிகைகளிடம் நான் சொன்னேன். யாரும் அதில் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. ஹரீஷ் கல்யாணுக்கு மாமியாரா என்று இந்த படத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டனர். இப்படியே 6 மாதங்கள் தள்ளிப் போய்விட்டது. படப்பிடிப்பை துவங்க முடியவில்லை. ஆனால் இந்த கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடிகை சுவாசிகா ஹரிஷ் கல்யாணின் மாமியாராக நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய அடுத்த படம் பற்றியும் அதை யாரை நடிக்க வைப்பேன் என்றும் கேட்கிறார்கள். ஒரு கதையை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு கதையும் அதை இயக்கும்போது அமையும் நேரமும்தான் நாயகனை தேர்வு செய்யும் என்று இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசியிருக்கிறார். இவர் நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்க ஏற்கனவே கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்