- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளைய மனிதன் பட இயக்குனர் வேலு பிரபாகரன் மறைவு - திரையுலகில் தொடரும் சோகம்!

நாளைய மனிதன் பட இயக்குனர் வேலு பிரபாகரன் மறைவு – திரையுலகில் தொடரும் சோகம்!

- Advertisement -

நாளைய மனிதன் கடவுள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் வேலு பிரபாகரன். கடந்த 1989ம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வேலு பிரபாகரன். பிரபு ஜெய்சங்கர் அமலா ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் திகில் திரில்லர் படமாக இருந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து சத்யராஜ் மற்றும் ராதா நடித்த பிக்பாக்கெட் மோகன் நடித்த உருவம் நடிகர் பிரபு மற்றும் குஷ்பு நடித்த உத்தமராசா உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேலு பிரபாகரன், அதன்பின்னர் புதிய ஆட்சி அசுரன் கடவுள் புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை அவரே டைரக்ட் செய்து இருக்கிறார்.

- Advertisement -

அதன்பின் காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி போன்ற சில படங்களை அவர் இயக்கினார். கஜானா வெப்பன் ஜாங்கோ உள்ளிட்ட சில படங்களில் வேலு பிரபாகரன் நடித்திருக்கிறார். கடவுள் மறுப்பாளரான வேலு பிரபாகரன் தங்களது படங்களில் அதுசார்ந்த காட்சிகளையும் தனது கேரக்டர்களில் கொண்டு வந்தார். பகுத்தறிவு கருத்துகள் அவரது படங்களில் இருந்தன.

பி ஜெயா தேவி என்பவரை இயக்குனர் வேலு பிரபாகரன் திருமணம் செய்தார். அதன்பிறகு கடந்த 2017ம் ஆண்டில் தனது 60வது வயதில் தன்னைவிட 25 வயது குறைவான நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை வேலு பிரபாகரன் 2வது திருமணம் செய்து கொண்டார். நடிகை ஷிர்லே தாஸ் வேலு பிரபாகனுடன் காதல் கதை என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்ட நிலையில் வேலு பிரபாகரன் தனது 60வது வயதில் ஷிர்லே தாஸை 2வது திருமணம் செய்து கொண்டார். அப்போதே அது பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இளம் வயது பெண்ணை, தன்னை விட 25 வயது குறைந்த ஷிர்லே தாஸை இயக்குனர் வேலுபிரபாகரன் 60 வயதில் திருமணம் செய்துக்கொண்டதுதான் புரட்சியா என்று பலரும் அவரை மிக கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் வேலுபிரபாகரனுக்கு 68 வயதான நிலையில், சென்னையில் இன்று காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மறைந்தாா். அவரது உடல் வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்தான் தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாசராவ் மற்றும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைந்தனர். இந்நிலையில் இப்போது இயக்குனர் வேலு பிரபாகரன் மறைவும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்