- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் என்ன வேணாலும் பேசீட்டு போகட்டும், எனக்கு கவலை கிடையாது, ஆனா அதைப்பத்தி யாருமே பேசலையே…?...

ரசிகர்கள் என்ன வேணாலும் பேசீட்டு போகட்டும், எனக்கு கவலை கிடையாது, ஆனா அதைப்பத்தி யாருமே பேசலையே…? – தி கோட் குறித்து வெங்கட்பிரபு

- Advertisement -

தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்த, இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்த தி கோட் படம் கடந்த 5ம் தேதி வெளியானது. தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என ஆங்கில டைட்டில் வைக்கப்பட்டு உருவான இந்த படம் இதுவரை 312 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முதன்முறையாக விஜய் – வெங்கட் பிரபு இணைந்து அவர்களது கூட்டணியில் உருவாக்கப்பட்ட இந்த படம், முதல் நாளில் 126 கோடி ரூபாய், நான்காம் நாளில் 288 கோடி ரூபாய் என்று வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் குறித்து பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

- Advertisement -

நட்சத்திர கூட்டம், பழைய படத்தின் கதை என பலரும் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் நெகடிவ் விமர்சனங்கள் அதிகமாக உள்ள நிலையில், இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குனர் வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் ரசிகர்களின் விமர்சனம் குறித்து கவலை இல்லை என்றும் பகிரங்கமாக அவர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து வெங்கட் பிரபு கூறுகையில், கமர்ஷியல் படத்திற்கான விமர்சனத்தை யாருமே செய்யவில்லை. இந்த படத்தின் ஜானர் தொடர்பான விமர்சனத்தை யாருமே பண்ணவில்லை. எதுக்கு பாடல், பழைய படத்தின் ரெபரன்ஸ் என்றுதான் நிறைய பேசுகிறார்கள். படத்தைப் பற்றி விமர்சனம் குறைவாகத்தான் உள்ளது.

- Advertisement -

எனக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது. வேண்டும் என்றுதான் நான் அந்த பாடல்களை வைத்தேன். அந்த பழைய ரெபரன்ஸ்களை படத்தில் வைத்தேன். எந்த ஒரு பெரிய பெரிய நடிகரின் படத்திலும் மற்ற நடிகர்களின் ரெபரன்ஸ் இருக்காது. ஆனால் தி கோட்படத்தில் உள்ளது. விஜய் நினைத்திருந்தால் அதை கட் செய்யுமாறு என்னிடம் சொல்லி இருக்க முடியும்.

ஆனால் எல்லா பிரபலங்களின் ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாட வேண்டும் என்று அவர் நினைத்தார். ரெபரன்ஸ் தாண்டி படத்தின் கதை பற்றி விமர்சனம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விமர்சனம் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதை ரொம்பவும் ஆராய முடியாது என்று கூலாக கூறி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

- Advertisement -

சற்று முன்