இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படம் கடந்த 20ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் படத்தை மிகச் சிறப்பாக உள்ளதாக பாராட்டினாலும் ஒரு தரப்பினர் மட்டும் முதல் பாகத்தை போல திரைக்கதை சிறப்பாக இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.
விடுதலை முதல்பாகம் படத்தில் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், 2ம் பாகத்தில் சூரி வரும் காட்சிகள் மிக குறைவாக உள்ளன. முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்தது போல், 2ம் பாகத்தில் சூரி கேமியோ ரோலில் நடித்திருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது, விடுதலை 3ம் பாகம் என்ற இன்னொரு தீவிரமான பயணத்திற்கு நான் இப்போது தயாராக இல்லை. ஏற்கனவே விடுதலை படத்திற்காக நிறைய காட்சிகளை படமாக்கி விட்டோம். முதல் பாகம் இரண்டாம் பாகம் மற்றும் திரைப்பட விழா வெர்ஷன் என ஏகப்பட்ட படப்பிடிப்பை நடத்தி விட்டோம்.
தற்போது மட்டும் மொத்தமாக 8 மணி நேரம் விடுதலை படம் உள்ளது. விடுதலை 2 படம் ஓடிடியில் ஒரு மணி நேரம் கூடுதலாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அதாவது 3 படங்களாக வரவேண்டிய படங்களை 2ங பாகங்களாக பிரித்து வெளியிட்டு இருப்பதால், ஓடிடியில் வெளியாகும்போது ஒரு மணி நேரம் கூடுதலாக காட்சிகள் இடம்பெறும் என்பதை அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
மேலும் வெற்றிமாறன் கூறுகையில், விடுதலை 2 படத்தை விஜய் சேதுபதி பார்வையில் கொண்டு போக இருந்தோம். ஆனால் ரிலீஸ்க்கு ஒரு நாள் முன்பாக தான் சூரி பார்வையில் கதை போவதாக மாற்றி அமைத்தோம். சூரி வேறு படத்தில் பிஸியாக இருந்தாலும் டப்பிங் பேசிக் கொடுத்தார். அதன் பின்னர் ரிலீஸ்க்கு முன்புதான் படத்தில் 8 நிமிடம் எட்டு காட்சிகளை குறைத்தோம் என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் விடுதலை 3 படம் இல்லை என வெற்றிமாறன் தெரிவித்துள்ளது சூர்யா ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விடுதலை 2 படம் ஓடிடியில் கூடுதலாக ஒரு மணிநேரம் ஓடுவதால் ஓடிடியில் அந்த படத்தை முழுமையாக பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.





