- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் வெற்றிமாறன்தானா இது? ஷூட்டிங் ஸ்பாட்டில் திகைத்துப் போன படக்குழுவினர் - ஆனா சிம்பு இதுக்கு...

இயக்குனர் வெற்றிமாறன்தானா இது? ஷூட்டிங் ஸ்பாட்டில் திகைத்துப் போன படக்குழுவினர் – ஆனா சிம்பு இதுக்கு எப்படி ஓகே சொன்னார் தெரியலையே?

- Advertisement -

பொல்லாதவன் படம் மூலம் இயக்குனரான அறிமுகமானவர் வெற்றிமாறன். இயக்குனர் பாலுமகேந்திராவிடம் தொழில் கற்றவர். ஆனால் அவரது குருவின் படங்களுக்கும் வெற்றிமாறன் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமே இருக்காது. அப்படிப்பட்ட வித்யாசமான இயக்குனராக வெற்றிமாறன் இருந்து வருகிறார். இதுவரை அவர் இயக்கிய படங்கள் எல்லாமே தனி ரகம்தான்.

பொல்லாதவன் துவங்கி ஆடுகளம் அசுரன் வடசென்னை விசாரணை விடுதலை விடுதலை 2 என அவரது ஒவ்வொரு படங்களும் கம்யூனிசம் பேசும் படங்களாகவும் வன்முறை களத்தில் உருவான படங்களாகவும் இருக்கின்றன. இப்போது சிம்பு நடிக்கும் அரசன் என்ற படத்தையும் ராஜன் வகையறா என்ற படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறனை பொருத்த வரை ஷூட்டிங் நாட்களை மாதக்கணக்கில் அல்ல வருடக் கணக்கில் நீடிப்பவர். விடுதலை விடுதலை 2 படங்களை எடுத்து முடிக்க 4 ஆண்டுகளுக்கு மேல் அவர் எடுத்துக்கொண்டார். இதில் விடுதலை படம் அளவுக்கு விடுதலை 2 படம் சரியாக ஓடவில்லை. ஆனால் நிறைய நாட்களை வீணடிப்பவர் என்கிற பெயர் வெற்றிமாறனுக்கு உண்டு.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இப்போது அரசன் மற்றும் ராஜன் வகையறா என்ற 2 படங்களையும் ஒரே நேரத்தில் டைரக்ட் செய்து வருகிறார். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ராஜன் வகையறா படப்பிடிப்பையும், மாலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை அரசன் படப்பிடிப்பையும் வெற்றிமாறன் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

- Advertisement -

அத்துடன் இரவு 2 மணிக்கு தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள தனது கேரவனிலேயே தங்கி விடும் வெற்றிமாறன் அங்கேயே தூங்கி எழுந்து மறுநாள் காலை 9 மணிக்கு ஷூட்டிங்குக்கு தயாராகி விடுகிறார். இப்படி ஒரே நாளில் 2 ஷிப்ட் முறையில் பகலில் ராஜன் வகையறா படப்பிடிப்பு இரவில் அரசன் படப்பிடிப்பு என வெற்றிமாறன் படு பிஸியாக இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் நடிகர் சிம்பு அரசன் படப்பிடிப்பில் தொடர்ந்து இரவு நேரங்களில் நடிக்கிறாரா, அதற்கு அவர் எப்படி சம்மதித்தார் என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் ஆண்டுக்கணக்கில் படப்பிடிப்பை தாமதிக்கும் வெற்றிமாறன், ஒரே நாளில் 2 படங்கள் ஷூட்டிங்கை நடத்துவதும் கேரவனிலேயே இரவில் தங்கிக் கொள்வதும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்