- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் தம்பி தலைமையில்… படம் வெற்றிக்கு பின் நடிகர் ஜீவா எடுத்த அதிரடி முடிவு -...

தலைவர் தம்பி தலைமையில்… படம் வெற்றிக்கு பின் நடிகர் ஜீவா எடுத்த அதிரடி முடிவு – அதுக்காக இப்படியா என முகம் சுளிக்கும் இயக்குனர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களிடம் பெயர் பெற்றவர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் இளைய மகன். இவரது அண்ணன்தான் ஜித்தன் ரமேஷ் என்பது ரசிகர்கள் அறிந்த தகவல்தான். நடிகர் ஜீவா தமிழில் பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர்.

குறிப்பாக ராம் டிஸ்யூம் சிவா மனசுல சக்தி தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் கோ அரண் நண்பன் என பல படங்களில் ஜீவா நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு ஜீவா நடித்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதே நேரத்தில் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவும் இல்லை.

- Advertisement -

இந்நிலையில்தான் மலையாளத்தில் பெமிலி என்ற ஹிட் படம் கொடுத்த இயக்குனர் தலைவர் தம்பி தலைமையில் என்ற படத்தை டைரக்ட் செய்தார். இந்த படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸாகி பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றது. வசூலும் பெரிய அளவில் அள்ளியது.

பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படமும் ரிலீஸாகவில்லை. சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் கார்த்தி நடிக்க வா வாத்தியார் படமும் பெரிய அளவில் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் தலைவர் தம்பி தலைமையில் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் ஜீவா பஞ்சாயத்து தலைவர் கேரக்டரில் நடித்திருந்தார். திருமண வீடும் துக்க வீடும் அருகருகே உள்ள நிலையில் அங்கு ஏற்படும் பிரச்னைகள்தான் படத்தின் மையக்கதை. இளவரசு தம்பி ராமையா போன்றவர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இனி அடுத்த படங்களும் இதே போல் மாஸ் ஹிட் படங்களாக இருக்க வேண்டும் என ஜீவா திட்டமிட்டுள்ளார்.

அதற்காக இதுவரை பல இயக்குனர்களிடம் 30க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டுள்ள அவர், அந்த கதைகளில் திருப்தி இல்லை என்று நோ சொல்லி விட்டார். இப்படியே நோ சொல்லிக்கொண்டு இருந்தால் அடுத்த படத்தில் ஜீவா நடிப்பது எப்போது, சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் அதை திருத்தம் செய்து கதையில் மாற்றம்தான் செய்ய வேண்டும். 30 கதைகளில் ஓரிரு கதைகள் கூட தேறவில்லை என்று கதை சொன்ன இயக்குனர் பலரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்