- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் இப்படி ஒரு குளறுபடி நடந்ததா? வருகிற 3ம் தேதி...

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் இப்படி ஒரு குளறுபடி நடந்ததா? வருகிற 3ம் தேதி இந்த குழப்பம் வராம பார்த்துக்குவாங்களா? – விஜய் கவனிப்பாரா?

- Advertisement -

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ரூ 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் இப்போது அவர் மட்டும்தான். நடிகர் விஜய் நடிப்பை கடந்து, மக்களுக்கு அவரை மிகவும் பிடித்திருப்பதால் அவர் இப்போது அரசியலில் குதித்திருக்கிறார், தமிழகத்தின் முதல்வர் என்ற நாற்காலியை பிடித்த தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி இயக்கத்தை துவக்கி இருக்கிறார்.

எனினும் அரசியலுக்கு வரும் முன்பே, தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து விஜய் மக்கள் இயக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே துவக்கிய விஜய், அந்த இயக்கம் வாயிலாக மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வந்தார். கடந்த ஆண்டில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தொகுதி வாரியாக வரவழைத்து ரொக்கப் பரிசு, கல்வி விருது வழங்கினார்.

- Advertisement -

அதே போல் இப்போது நடப்பாண்டிலும் அதே போல், மாணவ மாணவியருக்கு இரண்டு கட்டங்களாக கல்வி விருது வழங்கும் விழாவை நடத்த விஜய் முடிவு செய்தார். அதன்படி கடந்த 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் முதல்கட்ட விழா நடத்தப்பட்டு, 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியருக்கு கல்வி விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை விஜய் வழங்கினார்.

இதே போல் வருகிற 3ம் தேதி, அதே மண்டபத்தில் 2ம் கட்டமாக கல்வி விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் இதே போல் ரொக்கப் பரிசு மற்றும் கல்வி விருதுகளை நடிகர் விஜய் வழங்க இருக்கிறார். இதற்காக ரூ. 3 கோடி வரை தனது சொந்த பணத்தை நடிகர் விஜய் மாணவ, மாணவியருக்கு ஒதுக்கித் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று முன்தினம் 28ம் தேதி நடந்த விருது வழங்கும் விழாவில் சில குளறுபடிகள் நடந்திருப்பது, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என தடை செய்யப்பட்டது. ஏனெனில் மேடையில் பலரும் விஜயுடன் செல்பி எடுப்பதால் விழா நிகழ்ச்சி முடிவடைய பல மணி நேரம் தாமதம் ஆகிறது என்பதால்தான் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த விழாவில் பாதுகாப்புக்காக வந்திருந்த செக்யூரிட்டி அமைப்பினர் பலருக்கும் தமிழ் தெரியாததால் விழாவுக்கு வந்த பெற்றோர்கள், தவெக கட்சி நிர்வாகிகளை மண்டப அரங்குக்குள் செல்ல விடாமல் தடுத்ததால், அங்கு வாக்கவாதங்களும், பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பவுன்சர்களுக்கும் தமிழ் தெரியாததால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குளறுபடிகளால் விழாவுக்கு வந்த சிலர், உள்ளேயே செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்