- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்யாணம் பண்ணிக்காமல் குழந்தை பெத்துக்கலாம், சர்ச்சையை கிளப்பிய திவ்யா சத்யராஜ் - தன்னுடைய மகளுக்காக களத்தில்...

கல்யாணம் பண்ணிக்காமல் குழந்தை பெத்துக்கலாம், சர்ச்சையை கிளப்பிய திவ்யா சத்யராஜ் – தன்னுடைய மகளுக்காக களத்தில் குதித்த நடிகர் சத்யராஜ்!

- Advertisement -

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. கடந்தாண்டில் திமுகவில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால் விருப்பமனு கொடுத்தும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கட்சி தலைமை திவ்யாவுக்கு வாய்ப்பு தரவில்லை. ஆனால் சத்யராஜ், திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார மேடைகளில் பேசினார்.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசிய திவ்யா சத்யராஜ், எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. தாலி கட்டிக்கொள்வது மோதிரம் மாற்றிக் கொள்வது போன்ற சடங்குகளில் எனக்கு ஆர்வம் இல்லை. திருமணம் செய்துக் கொள்ளாமல் கூட குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அதில் தவறு இல்லை என்று சர்ச்சையாக பேசியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய மகள் திவ்யா திருமணம் சடங்குகள் ஜாதி மதம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். இதுகுறித்து சிலர் ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். என்னிடம் அதுபற்றி கருத்து கேட்டனர்.

நான் ஒரு பெருமைக்குரிய பெரியாரிஸ்ட். ஜாதி மதம் சடங்கு இதில் எல்லாம் எனக்கு உடன்பாடே இல்லை. திருமணம் என்பது கட்டாயம் இல்லை. அது தனிநபர் விருப்பத்தை சார்ந்த விஷயம். திருமணம் செய்வதாக இருந்தாலும் சரி, திருமணத்துக்கு பிறகு ஒத்துவராமல் டைவர்ஸ் பண்றதாக இருந்தாலும் சரி, இல்லே தனியாகவே வாழ்ந்துட்டு இருந்தாலும் சரி.

- Advertisement -

திருமணம் செய்துக்கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றாலும் அதற்கான மருத்துவ வசதிகள் மருத்துவ துறையில் இன்று இருக்கிற வளர்ச்சியில் அதற்கான வாய்ப்புகளும் இருக்குது. அது சரியாக அமையலாம். அமையாமல் கூட போகலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் போது இது எல்லாமே தனி நபர் விருப்பம் சார்ந்த விஷயம்தான்.

அதனால் திவ்யா சொல்கிற அந்த கருத்துகளில் எல்லாம் நானும் ஒத்துப் போகிறேன். உடன்பட்டு போகிறேன் அப்படீன்னு தெரிவிச்சுக்கிறேன் என்று அந்த வீடியோவில் நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார். தனது மகள் திவ்யா கருத்துகளுக்கு பெரிய சர்ச்சை விமர்சனம் எழுந்துள்ள நிலையில், சத்யராஜூம் அந்த கருத்துகளுக்கு உடன்படுகிறேன், ஒத்துப்போகிறேன் என்று கூறியிருப்பது இன்னும் இதை சர்ச்சையாக்கி உள்ளது.

- Advertisement -

சற்று முன்