80களில் இளம் பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்தவர் மோகன். அவரது சிரிப்பும், பார்வையும், நடிப்பும் அப்போதுள்ள இளம் வயது பெண்களை வசீகரப்படுத்தியது. ஒரு முறை மோகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம்.

அப்போது அந்த மருத்துவமனையே ஒரு பெண்கள் கல்லூரி போல் காட்சியளித்ததாம். அவரை பார்ப்பதற்காகவே அத்தனை இளம்பெண்கள் அந்த மருத்துவமனையில் குவிந்தார்களாம். அந்தளவுக்கு மோகன் பெண்களிடையே கொண்டாடப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பிரபல டாக்டர்.காந்தராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “மோகன் நடித்த பல திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டிருக்கிறது. ஆனால் அது அவருக்காக ஓடிய திரைப்படம் இல்லை. மோகனுக்கு நடிக்கவே தெரியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “மோகன் ஒன்றும் பெரிய நடிகர் எல்லாம் இல்லை. அவரை ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் எல்லாம் ஒப்பிடவே முடியாது. அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதற்கு மோகன் காரணம் கிடையாது. இளையராஜாவின் இசையும்தான் அவர் திரைப்படங்கள் வெற்றிபெற்றதற்கு காரணம். இளையராஜா மெட்டமைத்த பாடல்களால்தான் மோகனின் திரைப்படங்கள் வெற்றிபெற்றன” என்றும் கூறியுள்ளார்.
மோகனின் திரைப்படங்களின் வெற்றிக்கு இளையராஜா மிகப் பெரிய பங்கு வகித்தது உண்மைதான் எனினும், மோகனின் நடிப்புக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது. அவர் பல ரொமாண்டிக் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சில ஹாரர், திரில்லர் திரைப்படங்களிலும் மோகன் நடித்துள்ளார். இந்த நிலையில் டாக்டர் காந்தராஜ் நடிகர் மோகனுக்கு நடிக்கவே தெரியாது என கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.





