- Advertisement -
Homeபொழுதுபோக்குடிராகன் படம் வெற்றியால் மாஸ் ஹிட் பட இயக்குனருக்கு இப்படி ஒரு பாதிப்பா? - அட...

டிராகன் படம் வெற்றியால் மாஸ் ஹிட் பட இயக்குனருக்கு இப்படி ஒரு பாதிப்பா? – அட அஸ்வத் மாரிமுத்து இப்படி ஒரு வேலையை பார்த்துப்புட்டாரா?

- Advertisement -

கடந்த 2019ம் ஆண்டில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி காஜல் அகர்வால் யோகிபாபு கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நாயகனாக நடித்த படம் லவ் டுடே. இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக ரூ. 100 கோடி வசூலித்தது.

இப்போது ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து கடந்த 21ம் தேதி வெளியான படம் டிராகன். இந்த படத்தை தயாரித்தது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம். இதற்கு முந்தைய பிரதீப் ரங்கநானின் படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம்தான் என்பதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

பிரதீப் ரங்கநாதனுடன் கயாடு லோஹர் அனுபமா பரமேஸ்வரன் இவானா இந்துமதி ஜார்ஜ் மரியன் மிஷ்கின் கௌதம் மேனன் விஜே சித்து உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாஸ் ஹிட் படமாக 3 நட்களில் ரூ. 50 கோடியும் 6 நாட்களில் ரூ. 75 கோடியும் உலகளவில் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 6 நாட்களில் ரூ. 45 கோடி வசூலை கடந்திருக்கிறது.

டிராகன் படத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் என பிற மொழிகளிலும் டிராகன் படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் டிராகன் படத்தை ரசிகர்கள் பலமடங்கு உற்சாகமாக கொண்டாடுகின்றனர். சமீபத்தில் ஆந்திரா தெலுங்கானா பக்கம் சென்று தியேட்டர்களுக்கு விசிட் அடித்த டிராகன் படக்குழுவை அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று பாராட்டி அவர்களை உச்சி குளிரச் செய்துவிட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி சினிமாவில் முக்கிய இயக்குனராக உள்ளவர் இயக்குனர் பிரசாந்த் நீல். கேஜிஎப் கேஜிஎப் 2 என்ற மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். சலார் என்ற படத்தையும் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இவர் கன்னடத்தில் கடந்த 2014ம் ஆண்டில் உக்ரம் படத்தை இயக்கி இயக்குனராக சினிமாவில் அறிமுகமானவர்.

இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு புதிய படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்துக்கு அவர் வைத்த டைட்டில் டிராகன். ஆனால் அதே டைட்டிலில் தமிழ் சினிமா இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து படம் எடுத்து, அது தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. அதனால் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்துக்கு டிராகன் என்ற பெயர் வைக்க முடியாத சிக்கல் இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்