- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கட்சிக்கு மொத்தமாக ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி… திமுகவை விட அரண்டு போன...

நடிகர் விஜய் கட்சிக்கு மொத்தமாக ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி… திமுகவை விட அரண்டு போன தவெக கட்சி நிர்வாகிகள் – ஏலே… இது பெரிய சம்பவம் லே!

- Advertisement -

வருகின்ற சட்டசபை தேர்தலை பொருத்தவரை வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் தான் தமிழக அரசியல் கட்சிகள் இந்த தேர்தல் களத்தை சந்திக்கின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக எப்படியும் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முழு முனைப்பில் உஷாராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இப்போது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை அடுத்த திமுக ஆட்சியில் முதல்வராக அமர வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பல தடாலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக கடந்த வாரத்தில் மகளிர் உரிமைத் தொகையை திடீரென 5 ஆயிரம் வங்கி கணக்கில் வைத்து பெண்களின் பலத்த ஆதரவை பெற்றார்.

- Advertisement -

இதில் மார்ச் ஏப்ரல் மே என 3 மாதங்களுக்கான உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதுடன் 2 மாதம் கோடை கால ஊக்கத் தொகையாக மொத்தம் 5000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவும் நாங்களும் சலித்தவர்கள் இல்லை என்பதைப் போல பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தந்து வருகிறது. ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெண்களைப் போலவே ஆண்களுக்கும் இனி இலவசமாக பயணிக்கலாம் கட்டணமில்லை என்று கூறியிருந்தார்.

இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு அட்டகாசமான வாக்குறுதியை தந்து தமிழக மக்களை அசத்தியிருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன், கடந்த 5 ஆண்டுகளாக விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அவர் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது அவர்களின் ஒவ்வொரு குடும்பத்தின் கைகளுக்கும் வந்து சேரும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதியால் தமிழக மக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் இதே நேரத்தில் ஆளுங்கட்சி திமுகவுக்கும் இது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை தந்துள்ளது. அதிமுக திமுக தொடர்ந்து பல வாக்குறுதிகளை பணப் பரிசுகளை அள்ளித் தருவதாக கூறும் நிலையில் நடிகர் விஜயின் தவெக கட்சியினர் அப்செட்டில் உள்ளனர்.

நாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று தவெகவினர் சூளுரைத்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி 10 ஆயிரம் ரூபாய் கருணைத்தொகை வழங்குவதாக அறிவித்திருப்பது தவெகவினருக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது. நிச்சயமாக 10 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைக்கும் என்றால் அனைவருமே அதிமுகவுக்கு தான் தங்களது வாக்குகளை அளிப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இப்படி ஒரே அறிவிப்பில் ஒட்டுமொத்தமாக தவெகவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆப்பு வைத்து விட்டார் என்று பலரும் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்