- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் ஜெயிக்கணும்னா இயக்குனர்கள் அதை இப்படிதான் பண்ணனும் - வெற்றிப் பட இயக்குனர் சுந்தர் சி...

சினிமாவில் ஜெயிக்கணும்னா இயக்குனர்கள் அதை இப்படிதான் பண்ணனும் – வெற்றிப் பட இயக்குனர் சுந்தர் சி சொன்ன சீக்ரட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெற்றிப் பட இயக்குனர் என்றால் அது சுந்தர் சி என தாராளமாக சொல்லலாம். நிச்சயமாக அவரது படங்கள் மினிமம் கியாரண்டி தரும் லாபகரமாக படங்களாகவே இருக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜ ராஜா படம் 12 ஆண்டுகள் கழித்து கடந்த பொங்கல் பண்டிகையன்று ரிலீஸ் ஆகி 50 கோடி ரூபாய் வசூலிக்கிறது என்றால் அது இயக்குனர் சுந்தர் சி நடத்திக்காட்டிய மேஜிக்தான்.

காதல் காமெடி சென்டிமென்ட் ஜானரில் தொடர்ந்து சுந்தர் சி வெற்றிப் படங்களை தந்துக்கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சுந்தர் சி இயக்கும் படங்களை தயாரிக்க தாராளமாக முன்வருகின்றனர். அதே போல் சுந்தர் சி படம் என்றாலே இரண்டரை மணி நேரம் ஜாலியாக பொழுதை கழித்துவிடலாம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ரசிகர்களும் தியேட்டர்களுக்கு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் தனது வெற்றிக்கான காரணம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, படத்தின் பட்ஜெட் லிமிட் என்ன என்பதை ஒரு இயக்குனர் எப்போதும் கவனத்தில் வெச்சுக்கணும். என்னதான் சிறந்த படத்தை தந்தாலும் பட்ஜெட் அதிகமாகி தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டால் ஆபரசேன் சக்சஸ் பேஷண்ட் டெத் என்கிற நிலைமைதான் ஏற்படும். அதனால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை.

சினிமாவில் ஒரு இயக்குனர் படத்தில் அதிக செலவு வைத்து தயாரிப்பாளரை காலி செய்து விட்டால் அவருக்கு அடுத்த பட வாய்ப்பு வராது. தயாரிப்பாளர்கள் அவர்களுக்கும் பேசும் போது, அவரை வெச்சு படம் எடுத்துடாதீங்க சார் என்று கூறிவிடுவார்கள். அதனால் புரடக்சன் லிமிட்டேசன் என்பது ரொம்ப முக்கியம்.

- Advertisement -

என்னை பொருத்த வரை இப்ப இருக்கிற வசதிகளுக்கு எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் இன்னும் ஷூட்டிங் நாட்களை நீங்கள் குறைக்கலாம். கம்மி பண்ணலாம். ஸ்கிரிப்ட்டுக்கு நீங்க ஒரு மாசம் இல்லே, ஆறு மாசம் உட்காருங்க. இல்லே ஒரு வருஷம் கூட உட்காருங்க. தப்பே கிடையாது. அது 2 பேரா 10 பேரா 15 பேரா அது முக்கியம் இல்லே, உங்க டீமோட உட்காருங்க. எத்தனை நாள் என்றாலும் அது தப்பே இல்லை.

ஆனால் ஷூட்டிங் லொகேஷனுக்கு பக்காவா பிளான் பண்ணீட்டு ரெடியா போங்க. உங்க கிரியேட்டிவிட்டி எல்லாத்தையும் உங்க பேப்பர்ல முடிச்சிடுங்க. லொகேஷன்ல சில விஷயங்கள் மேஜிக் மாதிரி தானா நடக்கும். ஆனா அங்க போய்ட்டு இஷ்டத்துக்கு படம் எடுத்தா யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை என்று இயக்குனர் சுந்தர் சி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்