- Advertisement -
Homeபொழுதுபோக்குஅல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு காத்திருக்குது சர்ப்ரைஸ்; போடு வெடிய, ...

அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு காத்திருக்குது சர்ப்ரைஸ்; போடு வெடிய, புஷ்பா 2 சூப்பர் அப்டேட் என்னான்னு தெரியுமா?

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த படம் புஷ்பா. கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், புஷ்பராஜ் என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜூனுக்கு இந்திய அரசு வழங்கி கவுரவித்தது.

ஒரு சிறந்த படம் தனது வெற்றியை அதுவே தீர்மானித்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. அதை போல் ஒரு திறமையான நடிகர், அவருக்கான கதையும் அவருக்கான பெயர் சொல்லும் விதமான படமும் தானாக அவரை தேடி வந்து அவரது புகழை நிச்சயம் சினிமா உலகில் நிலைநாட்டும் என்றும், அது தானாகவே நடக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிதான் புஷ்பா படம் அல்லு அர்ஜூக்கு அமைந்தது.

- Advertisement -

மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற புஷ்பா படம், பான் இந்தியா படமாக அமைந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், ரமேஷ் ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். புஷ்பா படம் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அப்போதே அறிவிக்கப்பட்டது.

புஷ்பா 2 படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து, 100 மில்லியன் வியூவ்ஸ் கடந்துள்ளது. இந்த டீசரை 100 மில்லியன் பேர் பார்த்துள்ள நிலையில், புஷ்பா 2 படம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதே 450 கோடி ரூபாய் வியாபாரம் நடந்துள்ள நிலையில், ஆயிரம் கோடி ரூபாயை எளிதாக கடந்து விடும் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 250 கோடி ரூபாய்க்கு புஷ்பா 2 படத்தை நெக்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் கூறுகிறது. அதேபோல் புஷ்பா 2 படத்தின் இந்தி உரிமை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளது. அதனால் இந்த படம், முதல் படத்தை விடவும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 படம், ஆகஸ்ட் 15ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை டைரக்டர் சுகுமார் டைரக்ட் செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் (டிஎஸ்பி) இசையமைத்துள்ளார். இன்று மாலை 4:05 மணிக்கு புஷ்பா புஷ்பா என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏனெனில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடல் பெரிய அளவில் ரீச்சான நிலையில், இந்த முறை புஷ்பாவின் புகழ் பாடும்பாடலாக புஷ்பா புஷ்பா என்ற பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக இன்று மாலை 4:05 மணிக்கு வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்