- Advertisement -
Homeபொழுதுபோக்குடிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது விடுதலை 2 , அதற்கு முன்னதாக டிரெய்லர் மற்றும்...

டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது விடுதலை 2 , அதற்கு முன்னதாக டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா – எப்போ தெரியுமா?

- Advertisement -

விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனிக்கும், விடுதலை 2 பட இயக்குனர் வெற்றிமாறனுக்கும் மறைமுகமாக ஒரு பனிப்போரே 2 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தது. இருவரில் யார் மிக தாமதமாக படப்பிடிப்பை முடித்து படத்தை வெளியீடு செய்வது என்பதுதான் அது. ஒரு வழியாக அதில் விடாமுயற்சி இயக்குனர் மகிழ்திருமேனி வெற்றி பெற்றுவிட்டார். ஏனெனில் இன்னும் விடாமுயற்சி ரிலீஸ் ஆகவில்லை. எப்போது ரிலீஸ் என்பதும் இயக்குனர் மகிழ்திருமேனிக்கே தெரியாது.

ஆனால் ஒரு வழியாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம் வருகிற டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது உறுதியாகி விட்டது. கடந்த 2023ம் ஆண்டில் மார்ச் இறுதியில் விடுதலை படம் வெளியான நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குள் விடுதலை படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இப்போது 20 மாதங்கள் கழிந்த நிலையில் படம் ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

விடுதலை படத்தை தொடர்ந்து விடுதலை 2 படத்தில் நடித்த நடிகர் சூரி அதற்கு பின் கருடன் என்ற படத்தில் நடித்து, அந்த படமும் ரிலீஸாகி வெற்றிப் படமாக ஓடி விட்டது. அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் விடுதலை 2 படம் மட்டும் ரிலீஸ் என்பதில் இழுபறியே நீடித்தது.

இந்த சூழலில் வருகிற டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 படம் ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெற்றிமாறன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே போல் மகாராஜா படத்துக்கு பிறகு வெளியாகும் விஜய் சேதுபதி படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் இளையராஜா எழுதி இசையமைத்து பாடிய தினமும் தினமும் என்ற பாடலும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விடுதலை முதல் பாகத்தில் இடம்பெற்ற வழிநெடுக காட்டுமல்லி பாடல் போலவே இந்த பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் விடுதலை 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் டைரக்டர் வெற்றிமாறன், நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியார், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த விழா நடக்கும் இடம் குறித்து பின்னர் அறிவிக்க உள்ளனர். இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்