- Advertisement -
Homeபொழுதுபோக்குபணக்கார தொழிலதிபர்களை, நடிகர்களை 2வது திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகைகள், அந்த 5 பிரபல நடிகைகள்...

பணக்கார தொழிலதிபர்களை, நடிகர்களை 2வது திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகைகள், அந்த 5 பிரபல நடிகைகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?

- Advertisement -

சினிமா உலகை பொருத்த வரை கணவன் மனைவி விவகாரத்து என்பது மிகவும் சாதாரணமானதாக மாறி விட்டது. நீண்டகாலம் கணவன் மனைவியாக அவர்கள் மனம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வதுதான் அதிசயம். அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து போய் மறுமணம் செய்துக்கொள்வது சகஜமான ஒன்றாக தான் கருதப்படுகிறது.

அந்த வகையில் 2வது திருமணம் செய்யும் நடிகைகள் பணக்கார தொழிலதிபர்கள் அல்லது முன்னணி நட்சத்திர நடிகர்களை தான் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடித்த 5 நடிகைகள் 2வது திருமணம் செய்து கொண்ட பணக்கார தொழிலதிபர்கள், நடிகர்கள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். இவர் 2024ம் ஆண்டில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்ற தொழிலதிபரை 2வது மனைவியாக திருமணம் செய்துக்கொண்டார். நிக்கோலாய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் பல படங்களில் நடித்தவர். குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி வேலாயுதம் போகன் என பல படங்களில் நடித்தவர். இவர் தனது நெருங்கிய தோழியின் கணவர் சோஹேல் கதூரியா என்ற தொழிலதிபரை 2வது மனைவியாக திருமணம் செய்தார். ஆனால் சமீபத்தில் இவர்கள் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

- Advertisement -

அடுத்து நடிகை சோபிதா துலிபாலா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 2வது மனைவியாக திருமணம் செய்துக்கொண்டார். நடிகை சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்த நிலையில் சோபிதா துலிபாலா அவரை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இதில் நடிகை அமலா கடந்த 1980 களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை 2வது மனைவியாக திருமணம் செய்துக் கொண்டார். அதாவது தனது அப்பா நாகர்ஜூனா போலவே, அவரது மகன் நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

அடுத்து நடிகை ஸ்ரீதேவி இந்தியில் திரைப்பட தயாரிப்பாளராக இருந்த போனி கபூரை 2வது மனைவியாக திருமணம் செய்துக்கொண்டார். இப்படி 2வது மனைவியாக நடிகர்களை தொழிலதிபர்களை நடிகைகள் ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்கள் அனைவருமே 100 கோடி முதல் 1000 கோடிக்கு மேல் சொத்துள்ள பெரிய பணக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்