மலையாள சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவர் நடிகை மஞ்சுவாரியார். முன்னணி நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். பிறகு நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை 2வது திருமணம் செய்துக்கொண்டார். நடிகை மஞ்சுவாரியரின் நெருங்கிய தோழி காவ்யா மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. காசி படத்தில் விக்ரமின் தங்கையாக காவ்யா மாதவன் நடித்திருக்கிறார்.
நடிகை மஞ்சுவாரியார் தமிழிலும் நடித்திருக்கிறார். ரஜினிக்கு மனைவியாக வேட்டையன் படத்திலும் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இயக்குனர் லோகிதாதாஸ் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டில் சல்லாபம் என்ற மலையாள படத்தில் அறிமுகமான மஞ்சுவாரியர் இன்று வரை மலையாளத்தில் நல்ல நடிகையாக அழுத்தமான கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
சல்லாபம் படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் மனோஜ் கே ஜெயன். இவர் தமிழில் தூள் திருமலை திருப்பாச்சி திருட்டுப் பயலே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். விக்ரம் நடித்த தூள் படத்தில், திருமலை படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார். திருமலை படத்தில் வில்லன் கேரக்டரில் மனோஜ் கே ஜெயன் நடித்திருந்தார். இன்னும் பல படங்களில் தமிழில் மனோஜ் கே ஜெயன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகை ஊர்வசியின் முன்னாள் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சல்லாபம் படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் மனோஜ் கே ஜெயன் ஒரு நேர்காணலில் பங்கேற்றபோது அந்த படம் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, சல்லாபம் படத்தில் நடித்த மஞ்சு வாரியார் உயிருக்கே ஆபத்து ஏற்படும் விதமாக எப்படி நடித்தார் என்று அந்த நேர்காணலில் நடிகர் கூறியிருக்கிறார். மஞ்சுவாரியார் அறிமுகமான முதல் படத்திலேயே அவர் ஒரு அறிமுக நடிகைக்கான எந்த தயக்கங்களும் இன்றி அந்த கேரக்டராகவே மாறி எதார்த்தமாக நடித்தார்.
படப்பிடிப்பு துவங்கி கிட்டத்தட்ட 24 நாட்கள் ஆன நிலையில் அதன் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு ரயில்வே டிராக்கில் படமாக்கினார்கள். தனது உண்மையான காதல் தனக்கு கைகூடாத நிலையில் ஓடும் ரயிலில் விழுந்து தன் உயிரை மஞ்சு வாரியார் கேரக்டர் மாய்த்துக் கொள்வதாக காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியில் நானும் அவருடன் நடித்தேன். அப்போது மஞ்சு வாரியார் வசனம் பேசியபடியே தன்னை மறந்து அந்த கேரக்டராகவே மாறி ரயில் தண்டவாளத்தை மிகவும் நெருங்கி விட்டார்.
ரயில் கிட்டத்தட்ட அருகில் வந்துவிட்டது. அந்த சமயத்தில் உடனடியாக நான் அவரது கைகளை வலுவாக பிடித்து அவரை போகவிடாமல் தடுத்து நிறுத்தினேன். சரியாக அந்த நேரத்தில் ரயிலும் எங்களை மிக அருகில் ஒட்டியபடி சென்றது. பின்னாலிருந்து இயக்குனர் கட் சொன்ன பிறகுதான் நான் அவரை என் பிடியிலிருந்து விடுவித்தேன். அந்த காட்சி வீணாகிவிட்டது என்று தான் நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது என பாராட்டினார்கள். அன்று மட்டும் அவரை நான் இழுத்து பிடிக்காவிட்டால் அவர் ரயில் சக்கரங்களில் விழுந்து இருப்பார். ஒரு நல்ல நடிகை இந்த திரையுலகம் இழந்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.





