- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படத்தால் மத்த ஹீரோக்களுக்கு இப்படி ஒரு சங்கடமா? - பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள் -...

விடாமுயற்சி படத்தால் மத்த ஹீரோக்களுக்கு இப்படி ஒரு சங்கடமா? – பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள் – என்ன கொடும சார் இது…

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் இந்த மாதம் 6ம் தேதி வெளியான படம் விடாமுயற்சி. துணிவு படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளியான நிலையில் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த படத்தை படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.

நடிகர் அஜீத் குமாருடன் திரிஷா அர்ஜூன் ஆரவ் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். படம் முழுவதும் அஜர்பைஜானில் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹாலிவுட் படத்தின் தரத்தில் இருந்ததை ரசிகர்கள் பாராட்டவே செய்தனர்.

- Advertisement -

பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை காப்பியடித்துதான் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. இதற்காக பாரமவுன்ட் தயாரிப்பு நிறுவனத்திடம் முறையாக லைகா புரடக்சன்ஸ் அனுமதியும் பெறவில்லை. அந்த பஞ்சாயத்து காரணமாக தான் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டிய இந்த படம் பிப்ரவரி 6ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆனால் மாஸ் ஹீரோவான அவரை விடாமுயற்சி படத்தில் வில்லன்களிடம் அடிவாங்குவது போலவும் பல காட்சிகளில் வில்லன்களிடம் கெஞ்சுவது போலவும் காட்டியதை ஏகே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

- Advertisement -

குறிப்பாக இந்த படத்தில் படத்தின் நாயகி திரிஷா, தனது கணவர் அஜீத்குமாரை பிடிக்கவில்லை என்று கூறி வேறொருவர் மீது காதல் இருப்பதாகவும் கூறுவது போன்ற காட்சிகள், அஜீத்குமாரின் இமேஜையே டேமேஜ் செய்துவிட்டதாக சினிமா ரசிகர்கள் புலம்புகின்றனர். இப்போது புதிதாக வேறு ஒரு வகையிலும் விடாமுயற்சி படத்தை கலாய்த்து வருகின்றனர்.

படத்தில் பாதி வரை பொண்டாட்டியை தேடினால் அது ரஜினிகாந்த் நடித்த கபாலி படம். அதுவே படம் முழுவதும் ஹீரோ பொண்டாட்டியை தேடினால் அது அஜீத் நடித்த விடாமுயற்சி படம். பொண்டாட்டியே புருஷனை படம் முழுவதும் தேடினால் அது அரவிந்த் சாமி நடித்த ரோஜா படம். அதே பொண்டாட்டி நம்ம கூட இருக்கிறது உண்மையாகவே புருஷன்தானான்னு தேடி கண்டுபிடிச்சால் அது லியோ படம் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்