- Advertisement -
Homeபொழுதுபோக்குகாலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் - அன்றே சொன்ன சூப்பர் ஸ்டார், மதுராந்தகம் தாராபுரம்...

காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் – அன்றே சொன்ன சூப்பர் ஸ்டார், மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகள் விஜய்க்கு நிரூபித்து காட்டியதா? – ரசிகர்கள் விமர்சனம்!

- Advertisement -

அதிமுக – திமுக கட்சிகள் மீதும் அவர்கள் நடத்திய ஆட்சி மீதும் அதிருப்தியான மனநிலையில் இருந்த பெரும்பாலான மக்கள், அரசியல் மாற்றம் வேண்டும் என்று கருதினர். அந்த சூழலில் அரசியல் இயக்கம் துவங்கி களத்தில் இறங்கிய நடிகர் விஜய் மீது மக்களுக்கு ஒரு ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது. அவர் மேடையில் பேசிய பன்ச் டயலாக்குகளும் ஒருவித நம்பிக்கையை தந்தது.

ஆனால் தவெக 108 இடங்களில் தான் வென்றது. எனினும் திமுக ஆதரவில் கூட்டணியில் ஜெயித்த காங்கிரஸ் விசிக உள்ளிட்ட சில கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சியமைத்தது. தொகுதியில் விஜய் முகம் காட்டினாலே வெற்றிதான் என்றுதான் முதலில் தவெக சார்ந்த மாநில நிர்வாகிகள் கெத்து காட்டி பேசி வந்தனர்.

- Advertisement -

அப்போது ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவெக கட்சியின் மாநில நிர்வாகியான தேர்தல் பிரிவு செயலாளர் தற்போதைய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக மிரட்டலுக்கு பயந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மறுத்துவிட்டார். ஆனால் திமுகவை பார்த்து பயப்படாமல் அரசியல் கட்சி துவங்கியவர் விஜய் என்று பேசினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போது அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என்று மட்டுமே ஒரு பதிவில் கூறியிருந்தார். அவர் அன்று சொன்னது இப்போது உண்மையாகி விட்டது என்று தமிழ் சினிமா ரசிகர்கள் இணையத்தில் பதிவுகளை செய்து வருகின்றனர். ஏனென்றால் விஜய் நிலமை முன்பு இருந்ததை விட இன்று தலைகீழாக மாறிவிட்டது.

- Advertisement -

கொளத்தூரில் 5 நிமிஷம் பேசியதற்கே கொத்து பரோட்டா போட்டுட்டாங்க என்று திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து சட்டசபையில் கிண்டலாக பேசியிருந்தார். ஆனால் இப்போது இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஒவ்வொரு தொகுதியிலும் 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இது ஒரு நாள் ரோடு ஷோவில் சென்று பிரசாரம் செய்தார்.

விஜய் ரோடு ஷோ சென்ற பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டமும் இல்லை. மக்கள் ஆதரவும் இல்லை. வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டினார். ரோட்டோர டீக்கடையில் டீ குடித்தார். மாட்டு வண்டியில் சென்றார். மேடையில் தவெக வேட்பாளரை அழ வைத்தும் ஒரு டிராமா நடத்தி காட்டினார். எல்லாமே நாடகம் தான் என கேலி கிண்டல் செய்யப்பட்டு இணையத்தில் வைரலானதே தவிர விஜய்க்கு அது மாஸ் காட்டவில்லை. அதனால் அன்று ரஜினி சொன்னது, விஜய் முதல்வரான 4 மாதங்களில் பலித்துவிட்டது என்று பலரும் இணையத்தில் பேசி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்