- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்கள் குலசாமியே வெளியே வா, ரஜினி வீட்டின் முன் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருக்கும்...

எங்கள் குலசாமியே வெளியே வா, ரஜினி வீட்டின் முன் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருக்கும் ரசிகர்கள் – தரிசனம் தருவாரா ஜெயிலர் முத்துபாண்டியன்?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். வழக்கமாக அவரது பிறந்த நாளுக்கு இமயமலைக்கு செல்வதுதான் வழக்கம். ஆனால் இந்தமுறை அவர் இமயமலைக்கு செல்லவில்லை, ரஜினி 170 படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ளவில்லை. வீட்டில்தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தவிர நடிகர் தனுஷ், வரலட்சுமி சரத்குமார், விஷ்ணு விஷால், கார்த்திக் சுப்புராஜ், அனிருத், வசந்த் ரவி, தேசிங்கு பெரியசாமி, அருணா குகன், அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். #HBDSuperstarRajinikanth, #Thalaivar, #HBDRajinikanth என்ற ஹேஸ்டாக் எக்ஸ் தளத்தில் இன்று டிரண்டிங் ஆகி வருகின்றன.

ரஜினிகாந்த் பிறந்த நாளன்று, சென்னை போயஸ்கார்டன் வீட்டின் முன் ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அப்போது வீட்டுக்கு வெளியே வந்து ரசிகர்களை சந்திக்கும் ரஜினி, அவர்களது வாழ்த்துகளை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவிப்பார். பிறந்த நாள் செய்தியாக ஏதேனும் சொல்வார். ஆனால் இன்று மதியம் வரை அவர் ரசிகர்களை சந்திக்க வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டின் முன் காத்திருக்கும் ரசிகர்கள் எங்கள் குலசாமியே வெளியே வா, ஜெயிலர் முத்துபாண்டியன் வெளியே வாங்க, சிவாஜி ராவ் கெய்ட்வாட் வெளியே வாங்க, எங்கள் சிவனே வெளியே வாங்க என ரசிகர்கள் பலரும் கோஷம் எழுப்பிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இதுவரை ரஜினிகாந்த் வீட்டுக்கு வெளியே வந்து ரசிகர்களை சந்திக்காதது ஏமாற்றமளிக்கிறது.

வழக்கமாக ஷாருக்கான் போன்றவர்கள், தங்களது பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்னும் சில பிரபல நடிகர்கள் அந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவது, ரசிகர்களின் பரிசுகளை ஏற்றுக்கொள்வது, ரசிகர்களுடன் அமர்ந்து ஒருவேளை உணவை உட்கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தவும் செய்கின்றனர். ஆனால் ரஜினிகாந்த் போன்றவர்கள் இன்னும் ரசிகர்கள் தங்களை பார்ப்பதையே ஒரு வரமாக ரசிகர்கள் தந்து வருகின்றனர்.

சற்று முன்