- Advertisement -
Homeபொழுதுபோக்குலண்டனில் அரங்கேறிய இசைஞானியின் வேலியன்ட் சிம்பொனி இசை, தமிழ்நாட்டு ரசிகர்களின் செவிகளை குளிர வைப்பது எப்போது?...

லண்டனில் அரங்கேறிய இசைஞானியின் வேலியன்ட் சிம்பொனி இசை, தமிழ்நாட்டு ரசிகர்களின் செவிகளை குளிர வைப்பது எப்போது? – அதுவரைக்கும் காத்திருங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த அவர் பல ஆயிரக்கணக்கான பாடல்களை தனது இசையால் உருவாக்கி இருக்கிறார். கடந்த 47 ஆண்டுகளில் அவரது இசையை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

கடந்த 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில், உலகின் தலைசிறந்த இசைக்கலைஞர்கள் 80 பேர் கொண்ட லண்டன் ராயல் ஆர்க்கெஸ்ட்ரா குழு மூலம் தனது வேலியன்ட் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. அதன்பிறகு லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய அவரை தமிழக அரசு சார்பில் வரவேற்று கௌரவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இசைஞானி இளையராஜா, லண்டனில் சிறந்த முறையில் வேலியன்ட் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு ரசிகர்களின் அன்பு என்னால் மறக்க முடியாதது. லண்டனை தொடர்ந்து 13 நாடுகளில் இந்த சிம்பொனி இசையை நான் நேரடியாக நிகழ்த்த போகிறேன்.

அதே நேரத்தில் இந்த சிம்பொனி இசையை யாரும் டவுன் லோடு செய்து கேட்க வேண்டாம். ஏனென்றால் இசை பதிவாக கேட்கும்போது அதில் முழுமையான இசை உணர்வு ரசிகர்களுக்கு கிடைக்காது. 80 இசைக்கலைஞர்கள் உயிரோட்டமாக மேடையில் வாசிக்கும் போது கிடைக்கிற இசை அனுபவம், டவுன் லோடு செய்து கேட்கும் போது ரசிகர்களுக்கு முழுமையாக கிடைக்காது, என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் எனக்கு 82 வயதாகி விட்டது என்று யாரும் நினைக்காதீர்கள். பண்ணைபுரத்தில் இருந்து இந்த கால்களுடன் தான் நடந்து வந்தேன். இப்போதும் அதே கால்களுடன் நான் இங்கு நிற்கிறேன். 82 வயதாகி விட்டது. ஆனாலும் இனிமேல் தான் ஆரம்பிக்க போகிறேன். என்னை இசை தெய்வம் என்று கூறி, தெய்வத்தை என் அளவுக்கு கீழே இறக்காதீர்கள் என்றும் செய்தியாளர்களிடம் தனது உணர்வை இசைஞானி வெளிப்படுத்தி இருக்கிறார்.

லண்டனில் இசைஞானி இளையராஜா அரங்கேற்றம் செய்த வேலியன்ட் சிம்பொனி இசையை கேட்க தமிழ்நாட்டில் உள்ள அவரது இசை ஆர்வலர்கள் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். ஆனால் 13 நாடுகளில் இந்த சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றம் செய்த பிறகே, தமிழ்நாட்டிலும் அதை நேரில் அரங்கேற்றம் செய்ய வாய்ப்புள்ளது. அதற்கு இன்னும் சில ஆண்டுகள் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சற்று முன்