- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் மீண்டும் கேங்ஸ்டர் கதைகளில் சிக்கி தவிக்கும் தமிழ் சினிமா - லப்பர் பந்து குடும்பஸ்தன்...

மீண்டும் மீண்டும் கேங்ஸ்டர் கதைகளில் சிக்கி தவிக்கும் தமிழ் சினிமா – லப்பர் பந்து குடும்பஸ்தன் டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் ஜெயித்தும் இவங்க திருந்தலையே…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே நல்ல கதையம்சம் உள்ள படங்களை ரசிகர்கள் வரவேற்க தயங்குவதே இல்லை. நடிகர்கள் நடிகைகள் யாராக இருந்தாலும் கதைக்களம் நன்றாக இருந்தால் திரைக்கதை ஓட்டம் சுவாரசியமாக இருந்தால் அந்த படத்தை நிச்சயமாக ஜெயிக்க வைத்து விடுவார்கள். அதில் எந்தவிதமான பாரபட்சமும் ரசிகர்களுக்கு இல்லை.

அதனால்தான் காக்கா முட்டை பண்ணையாரும் பத்மினியும் சித்தா குட்நைட் பார்க்கிங் குடும்பஸ்தன் லப்பர் பந்து மாமன் படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் வரை பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறது. கதை நன்றாக இருந்தால் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடுவார்கள் என்பதற்கு டூரிஸ்ட் ஃபேமிலி மிக சிறந்த உதாரணமாக இப்போது இருக்கிறது.

- Advertisement -

ஆனால் சில இயக்குனர்கள் கேங்ஸ்டர் கதைகளை படமாக்கி ரசிகர்களை விரக்திடைய செய்து வருகின்றனர். எப்போதும் 2 குரூப்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளையே மையப்படுத்தி படங்களை எடுக்கும் போது இருவரில் ஒருவர் ஜெயிப்பது உறுதி. இதை ரசிகர்கள் பார்த்து என்ன செய்யப் போகிறார்கள் என்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் யோசிப்பதே இல்லை.

அதுமட்டுமின்றி சண்டை படங்கள்தான் பார்க்க வேண்டும் என விரும்பும் ரசிகர்களுக்கு தமிழை விட மிக அட்டகாசமான அமர்க்களமான சண்டை காட்சிகள் நிறைய ஹாலிவுட் படங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் ஹாலிவுட்டில் கூட நல்ல கதை கொண்ட படங்களை இயக்குவதில் இயக்குனர்கள் தனி ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இங்கே தமிழ் சினிமாவில் கத்தி துப்பாக்கி ரத்தம் வெட்டு குத்து என வெண்திரையை சிவப்பு திரையாக மாற்றி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி கேங்ஸ்டர் கதைகளாக வெளியான பல படங்கள் மண்ணை கவ்வியிருக்கின்றன. கங்குவா ரெட்ரோ அண்ணாத்த தர்பார் தக்லைஃப் லியோ என இந்த லிஸ்ட்டில் நிறைய படங்கள் இருக்கின்றன. பல நூறு கோடி ரூபாய்களை கொட்டி இந்த கேங்ஸ்டர் அடிதடி சண்டை படங்களை எடுப்பதை விட்டு விட்டு ரசிகர்கள் மனம் மகிழும்படியான உணர்வுபூர்வமான யதார்த்தமான படங்களை இயக்குனர்கள் எடுக்க முன்வர வேண்டும்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் குரு சோமசுந்தரம், எப்போதும் வன்முறை படங்களையே தமிழில் எடுக்கின்றனர். எனக்கு தெரிந்து எந்த ஊரிலும் வீட்டிலும் ஆண்கள் தினமும் கத்தி அரிவாள் துப்பாக்கி என எடுத்துக்கொண்டு ரோடுகளில் சுற்றித் திரிவதில்லை. அப்புறம் எப்படி இப்படியான படங்களை எடுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த பிறகாவது கேங்ஸ்டர் கதை இயக்குனர்கள் திருந்தினால் தமிழ் சினிமா இனியாவது தப்பிக்கும்.

- Advertisement -

சற்று முன்