- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் வராததால் பொங்கல் களத்தில் குதிக்கும் 7 படங்கள், பராசக்தி படத்துக்கு இப்படியும் ஒரு...

ஜனநாயகன் படம் வராததால் பொங்கல் களத்தில் குதிக்கும் 7 படங்கள், பராசக்தி படத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா? வசூல் என்னாகுமோ…?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகியிருந்தால் இது நடிகர் சிவகார்த்திகேயன் சொன்னதை போல அண்ணன் தம்பி பொங்கலாக இருந்திருக்கும். தியேட்டர்களில் தளபதி கச்சேரி களை கட்டியிருக்கும். ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்து விட்டது.

எனினும் பராசக்தி படம் ரிலீஸான நிலையில் ஆர்வமாக தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர்கள், படம் பார்த்த பிறகு அய்யோ சாமி தாங்க முடியலே என்ற விமர்சனங்களை வைத்து வருகின்றனர். பல தியேட்டர்களில் 2ம் நாளிலேயே ரசிகர்களை காண முடியவில்லை. பல தியேட்டர்களில் 10 பேர் கூட இல்லை என்று பலரும் வீடியோ காட்சிகளை இணையத்தில் பரவ விடுகின்றனர்.

இப்படி ஒரு சூழலில் இந்த படத்தை எடுக்க முதலீடு செய்த பட்ஜெட்டை திரும்ப தயாரிப்பு நிறுவனம் எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி சிவகார்த்திகேயன் அல்ல, அடுத்த சிவகார்த்திகேயனே ரஜினிதான் என்றும் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பராசக்தி படத்தை பொருத்த வரை பேசப்படும் ஒரே கேரக்டர் வில்லனாக நடித்த ரவிமோகன் மட்டும்தான்.

ஏற்கனவே பராசக்தி படம் மோசமான விமர்சனங்களால் தடுமாறிக்கொண்டு இருக்கிற இந்த சூழலில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக விஜய் நடித்த தெறி படமும் வருகிற 15ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த தெறி படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாகும்

மேலும் ஜனநாயகன் திரைக்கு வராததால் நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார், ரிச்சார்ட் ரிஷி நடித்த திரௌபதி 2 நடிகர் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் மற்றும் நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் ஆகிய 4 புதிய படங்களும் வருகிற 14 மற்றும் 15ம் தேதிகளில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. அதனால் பொங்கல் களத்தில் ரி ரிலீஸ் படங்கள் 3 புதிய படங்கள் 4 என மொத்தம் 7 படங்கள் ரிலீஸாக உள்ளன.

ஏற்கனவே பொங்கல் வசூலை அள்ளலாம் என்று களத்தில் இறங்கிய பராசக்தி படம் 2வது நாளிலேயே வசூல் இல்லாமல் தியேட்டர்களில் காற்று வாங்குகிற நிலையில் இப்படி 7 படங்கள் தியேட்டர்களுக்கு வருவதால் வருகிற 14 15 மற்றும் 16ம் தேதிகளில் கொஞ்சமாவது வசூல் பார்க்கலாம் என்று எதிர்பார்த்த பராசக்தி படக்குழுவினருக்கு செமத்தியான ஏமாற்றம் கிடைத்துள்ளது. பராசக்தி தமிழ் தீ பரவட்டும் என்று கோஷமிட்ட நிலையில், தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் காணாமல் போகட்டும் என்று தலைகீழாக மாறிவிட்டதோ என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்