கடந்த மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்ட வெற்றி படங்கள் சில, இந்த மாதம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின்றன. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள், இந்த மாதம் ஓ டி டி தளத்தில் வெளியாக இருக்கின்றன. குறிப்பாக கடந்த ஆகஸ்ட்டில் வெளிவந்த தங்கலான், டிமான்டி காலனி 2, வாழை, ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன.
அந்த வகையில் இப்போது அந்த படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி மீண்டும் ரசிகர்கள் பார்ப்பதற்கும் தியேட்டர்களில் அந்த படங்களை பார்க்காதவர் ரசிகர்களுக்கும் ஒரு அருமையான வாய்ப்பை தருகிறது.அதன்படி இந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் குறித்தும் அதை என்ன தேதியில் எந்த தளத்தில் வெளியாகின்றன என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படம் வரும் 13ம் தேதி வெள்ளியன்று ஜீ 5 தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட வாழை, கடந்த மாதம் 23ம் தேதி வெளியான இந்த படம் வருகிற 27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளிவர உள்ளது.
அதேபோல் சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் 15ம் தேதி வெளியான படம் தங்கலான். தங்க வயல் சுரங்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த கதையாக, அடிமை தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஆதரவை பெற்றது.
இந்த படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான நிலையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. தங்கலான் படம் வருகிற 20-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ட்ரீ – 2 என்ற படம், பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த இந்த படம் அமேசான் பிரைம் தளத்தில் வருகிற 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அதேபோல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு, டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக டிமாண்டி காலனி 2 படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவந்தது. இந்த படத்தில் அருள்நிதி நாயகனாக நடித்திருந்தார். திரில்லர் மற்றும் திகில் படமான டிமாண்டி காலனி 2 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் அமோகமான வசூலையும் பெற்று சாதனை படைத்தது. இந்த படமும் வருகிற 27ஆம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





