- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு உங்க படத்தில் வில்லன் கேரக்டர் எதுனா கொடுங்க… நடிகர் சிம்புவை அழைத்து பேசிய பிரபல...

எனக்கு உங்க படத்தில் வில்லன் கேரக்டர் எதுனா கொடுங்க… நடிகர் சிம்புவை அழைத்து பேசிய பிரபல அரசியல்வாதி – அசந்து போன எஸ்டிஆர்!

- Advertisement -

சினிமாவில் அரசியல்வாதி கேரக்டரில் பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இதில் பெரும்பாலான படங்களில் அரசியல்வாதியை வில்லன் கேரக்டரில்தான் இயக்குனர்கள் காட்டியிருப்பார்கள். ஏதேனும் ஓரிரு படங்களில் தான் நல்ல அரசியல்வாதி கேரக்டர் இருக்கும். இது யதார்த்தமாக நடந்ததா, அல்லது திட்டமிட்டே அப்படி நடக்கிறதா என்பது தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் அரசியல்வாதி என்றாலே கெட்டவர்கள் தான் என்கிற ஒரு மனநிலை மக்களுக்கு வரும் அளவுக்கு தமிழகத்தின் அரசியல் சூழல் இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாக உள்ளது. ஏனெனில் ஊழல் புகார்களில் நீதிமன்ற வழக்குகளில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மட்டுமின்றி முதலமைச்சர்களே சிக்கிக் கொள்ளும் நிலையில் தான் இந்தியா இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சுவாரசியமாக சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு இப்போது அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். ஆண்ட்ரியா யோகலட்சுமி சைத்ரா அமீர் சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது. சென்னை மற்றும் கோவில்பட்டியில் மாறி மாறி படக்காட்சிகள் எடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் நடிகர் சிம்புவை போனில் அழைத்து பேசியிருக்கிறார். அப்போது அவர், அரசன் படத்தில் நீங்கள் நடித்து வரும் தகவலை அறிந்தேன். வடசென்னை பின்னணியில் இந்த படம் உருவாகி வருவதாக தெரிய வந்தது. அதனால் இந்த படத்தில் வில்லன் ரோல் எதுனா இருந்தால் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட நடிகர் சிம்பு, இதுகுறித்து இயக்குனர் வெற்றிமாறனிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று ஜெயக்குமாரிடம் கூறியிருக்கிறார். வழக்கமாகவே அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் ஜாலியான ஒரு நபராக தான் பொது இடங்களில் நடந்துக்கொள்வார். எந்த மாதிரியான கேள்விகளுக்கும் தடாலடியாக பதில் தருவார். அவரது தோற்றமும் வில்லன் கேரக்டரில் நடிக்க சரியாக தான் இருக்கும் என்பதால் ஒருவேளை அரசன் படத்தில் நடிக்க வெற்றிமாறன் வாய்ப்பு தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

- Advertisement -

சற்று முன்