- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படம் ரிலீஸ் செய்வதில் மீண்டும் சிக்கலா? அப்செட் ஆன சூர்யா ரசிகர்கள் - வருகிற...

கருப்பு படம் ரிலீஸ் செய்வதில் மீண்டும் சிக்கலா? அப்செட் ஆன சூர்யா ரசிகர்கள் – வருகிற மே 14ம் தேதி படம் திரைக்கு வருமா, வராதா?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் மே 1ம் தேதியன்று தொழிலாளர் தினத்தில் வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் ரூ. 235 கோடி வசூலித்த நிலையில் படக்குழு தரப்பில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. அப்போது நடிகர் சூர்யா அகரம் பவுண்டேசனுக்கு ரூ. 10 கோடி நன்கொடை வழங்கினார்.

ரெட்ரோ படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்திலும் நடித்து முடித்து விட்டார். இப்போது மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சிங்கம் படத்துக்கு பிறகு இதில் சூர்யா மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரெட்ரோ படம் வெளியாகி 11 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் 20 நாட்களில் 12வது மாதமும் முடிய உள்ளது. ஆனால் ஓராண்டாக சூர்யா படம் எதுவும் திரைக்கு வரவில்லை. இதற்கு 3 படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்து விட்டார். இதில் அவரது 45வது படம் கருப்பு கடந்த ஆண்டே தீபாவளிக்கு ரிலீஸ் என கூறப்பட்ட நிலையில் படம் ரிலீஸ் ஆகவில்லை.

அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று தகவல் வெளியானது. ஆனால் ஜனநாயகன் பராசக்தி என 2 பெரிய படங்கள் வெளியாகிறது என்பதால் கருப்பு படம் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதே நேரத்தில் வா வாத்தியார் தலைவர் தம்பி தலைமையில் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின.

- Advertisement -

இந்நிலையில் ஒருவழியாக வருகிற மே 14ம் தேதி கருப்பு படம் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கருப்பு படம் ரிலீஸாகும் அதே நாளில் கேரளாவில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பில்லை என்ற ஒரு தகவல் இப்போது கிடைத்துள்ளது. மே 14ம் தேதி கருப்பு படம் கேரளாவில் ரிலீஸ் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் வருகிற மே 14ம் தேதி கேரளாவில் 3 மலையாள படங்கள் ரிலீஸாகின்றன. அதனால் எதிர்பார்த்த எண்ணிக்கையில் கருப்பு படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது. சூர்யாவுக்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் உள்ள நிலையில் நிறைய தியேட்டர்களில் படம் ரிலீஸானால் தான் எதிர்பார்த்த வசூல் கிடைக்கும். அதனால் கேரளாவில் மே 14ல் கருப்பு ரிலீஸ் ஆகாததால் தமிழிலும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்