- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இந்த இடத்துக்கு அப்படியே வரலே… என்னெல்லாம் பண்ணியிருக்கேன் தெரியுமா? - ஜீவி பிரகாஷ்குமார்...

நான் இந்த இடத்துக்கு அப்படியே வரலே… என்னெல்லாம் பண்ணியிருக்கேன் தெரியுமா? – ஜீவி பிரகாஷ்குமார் சொன்னதை கேட்டு வாய் பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ்குமார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த அவர், நடிகராகவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார். சமீபத்தில் அவரது 25வது படம் கிங்ஸ்டன் படம் வெளியானது. சில தினங்களுக்கு முன் வெளியான வீரதீர சூரன் 2 குட்பேட் அக்லி படங்களின் இசையமைப்பாளரும் அவர்தான்.

குறிப்பாக ஜீவி பிரகாஷ்குமார் நடித்த ஜெயில் செம திரிஷா இல்லேன்னா நயன்தாரா குப்பத்து ராஜா நாச்சியார் சிவப்பு மஞ்சள் பச்சை பென்சில் டார்லிங் என பல படங்களில் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. இசையிலும் நடிப்பிலும் ரசிகர்களின் கவனம் பெற்ற வரவேற்பை பெற்ற ஒரு கலைஞராக தான் அவர் இருந்து வருகிறார்.

ஜீவி பிரகாஷ் குமார், இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இசையில் தனது தாய்மாமா போல இல்லாமல் தனது பாணியில் இசையில் அசத்தி வருகிறார். மேலும் சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை அவர் பிரிவதாக அறிவித்தார். அவர்களது விவாகரத்து வழக்கு தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் கூறியதாவது, நானெல்லாம் இசையை ரொம்பவும் பாரம்பரியமாக கத்துக்கிட்டு வந்திருக்கேன். மியூசிக்கில் நான் ஒரு கோல்டு மெடலிஸ்ட். வெஸ்டர்ன் மியூசிக்கில் கோல்டு மெடலிஸ்ட். கிளாசிக் மியூசிக் படிச்சிருக்கேன். இந்துஸ்தானி படிச்சிருக்கேன். இதெல்லாம் படிக்கணும். நான் லைட் மியூசிக் ஆயிரம் மேடைகளில் வாசிச்சிருக்கேன்.

நான் 6 மியூசிக் டைரக்டர்களிடம் அசிஸ்டென்டாக வேலை செய்திருக்கிறேன். ஏஆர் ரகுமான் ஹாரிஷ் ஜெயராஜ் பரத்வாஜ் தீனா அனுமாலிக் என இவர்களிடம் எல்லாம் நான் 40 படங்களுக்கு அசிஸ்டென்ட் ஆக பணி செய்திருக்கிறேன். அவர்களிடம் ப்ரோகிராமராக இருந்திருக்கிறேன்.

இவர்களிடம் எல்லாம் பணிசெய்த பிறகுதான் நான் விளம்பர படங்கள் செய்தேன். விளம்பர படங்கள் செய்துவிட்டுதான் நான் திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்தேன். எனக்கு இசையில் அவ்வளவு பெரிய பயணம் இருக்கு. அதெல்லாம் படிச்சுட்டு வந்தேன். இப்படி நிறைய படிக்கும்போது அதுபற்றிய அறிவு பெரிய அளவில் கிடைக்கும். புதிய புதிய ஸ்டைலில் இசை தர முடியும் என்று ஜீவி பிரகாஷ்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்