இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கினார். அப்போதே இந்தியன் 3 படத்துக்கான லேட்டஸ்ட் அப்டேட்டுகளை வைத்து இந்தியன் 3 படத்தையும் உருவாக்கினார். அதனால் ஒரே காலகட்டத்தில் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களின் படப்பிடிப்புகளை நடத்தி முடித்தார். இதில் இந்தியன் 2 சமீபத்தில் வெளியானது. இந்தியன் 3, இன்னும் ஆறு மாதங்களில் வெளிவர இருக்கிறது.
இந்தியன் 2, இந்தியன் 3 படங்களை இயக்கி கொண்டிருந்த அதே காலத்தில் இயக்குனர் ஷங்கர், 3வதாக ஒரு படத்தையும் இயக்கினார். அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளிலும் ஈடுபட்டார். தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் உருவான அந்த படம்தான் கேம் சேஞ்சர். இந்த படத்தின் படப்பிடிப்பு பலமுறை இடைவெளி விட்டு விட்டு நடந்தது.
இதற்கு முக்கிய காரணம், இந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் ராம்சரண்தான். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன். படப்பிடிப்புகளுக்கு வருவதில் இன்னொரு சிலம்பரசனாக பெயர் வாங்கியவர். 4 நாட்கள் படப்பிடிப்புக்கு தொடர்ந்து வந்தால், பிறகு 4 வாரங்களுக்கு படப்பிடிப்புக்கே வர மாட்டார்.
இப்படி வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ராம்சரண் படப்பிடிப்புக்கு தாமதித்தால் 3 ஆண்டுகளாக இந்த படம் எடுக்கப்பட்டு வந்தது. எனினும் ஒரு வழியாக இப்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அடுத்து போஸ்ட் புரடக்சன் பணிகளும் முடிவடைந்த பிறகு. இந்த படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும்.
ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார்.
இந்நிலையில், தனுஷ் நடிப்பில் உருவான ராயன் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தில் ராஜூ கலந்துக்கொண்டார். அப்போது அவரிடம், கேம் சேஞ்சர் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருக்கிறது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும், என்று கூறியிருக்கிறார். அதாவது, டிசம்பர் 25ம் தேதி கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆகிறது என்ற தகவலை தயாரிப்பாளர் உறுதி படுத்தியிருக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





