- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 வசூலில் அள்ளியது இத்தனை கோடிகளா? பாக்ஸ் ஆபிஸில்...

6 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 வசூலில் அள்ளியது இத்தனை கோடிகளா? பாக்ஸ் ஆபிஸில் பணமழை கொட்டுதா… இது வேற லெவல் சம்பவமாக இருக்குதே?

- Advertisement -

இந்தியாவில் எப்போதுமே பக்தி படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது என்பதை மீண்டும் ஒருமுறை இப்போது வெளியான காந்தாரா சாப்டர் 1 படம் நிரூபித்திருக்கிறது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி கதை திரைக்கதை எழுதி அவரே டைரக்ட் செய்த காந்தாரா சாப்டர் 1 படம் 6 நாட்களாக வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது,

இந்த படம் கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியானது. படத்தில் ரிஷப் ஷெட்டி பெர்மே என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ருக்மணி வசந்த் ஜெயராம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீஸான முதல் நாளில் இருந்து மிகப்பெரிய வரவேற்பை ஆதரவை ரசிகர்களிடம் பெற்று வருகிறது. அதனால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

- Advertisement -

ஒரு சிறந்த திரைப்படம் என்பது தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகமடைய வைக்கும். அவர்களது எதிர்பார்ப்புக்கு சரியான தீனி போட்டால் நிச்சயமாக அந்த படத்தை ரசிகர்கள் பிரமாண்ட வெற்றியடைய செய்து விடுவார்கள். ஏற்கனவே 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படம் பெரிய அளவில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்த நிலையில் அந்த படம் மிக பிரமாண்டமான ஒரு வெற்றியை பெற்றது.

சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட காந்தாரா படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இப்போது இந்த படத்தின் தொடர்ச்சியாக காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. குறிப்பாக படத்தின் சண்டைக் காட்சிகளும், போர்க்களக் காட்சிகளும், வனப்பகுதி காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.

- Advertisement -

அத்துடன் படத்தின் திரைக்கதை மிகவும் நேர்த்தியாகவும் மக்களுக்கு சோர்வை தராத வகையிலும் உருவாகியுள்ளது. படத்தில் காதல் ஆக்சன் பக்தி சென்டிமென்ட் வீரம் காமெடி என எல்லாம் கலந்திருக்கிறது. கடந்த 2ம் தேதி வெளியான இந்த படம் இந்தியாவில் மட்டும் 6 நாட்களில் மொத்தம் 290.25 கோடி ரூபாய் வரை வசூலித்து விட்டதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளில் ரூ. 110 கோடியை கடந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி காந்தாரா சாப்டர் 1 படத்தின் 6 நாட்கள் மொத்த வசூல் ரூ. 400 கோடியை கடந்திருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் 6வது நாளில் இந்தியாவில் 33.5 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலித்துள்ளது. உலகளவில் 6 நாட்களில் மொத்தம் 400 கோடி ரூபாய்க்கு மேல் காந்தாரா சாப்டர் 1 படம் வசூலித்த நிலையில் வரும் தீபாவளிக்குள் நிச்சயமாக 1000 கோடி ரூபாய் வசூலை கடந்துவிடும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்