- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடைக்கு பூட்டு வாங்கி வந்த கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி… வடிவேலு மீம்ஸ் போட்டு...

இட்லி கடைக்கு பூட்டு வாங்கி வந்த கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி… வடிவேலு மீம்ஸ் போட்டு கலாய்த்த பிரபலம் – சுடச்சுட இட்லி கொண்டு வந்த தனுஷ் அப்செட்!

- Advertisement -

ஆரம்பத்தில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று உருவக்கேலி செய்யப்பட்ட நடிகர் தனுஷ் பின்னாளில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறினார். அயராத உழைப்பும் திறமையும் அவரை முன்னுக்கு கொண்டு வந்தது. பிறகு தயாரிப்பாளர் பாடகர் இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த நடிகர் தனுஷ் இதுவரை 4 படங்களை அவரே டைரக்ட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் வெளியானது. எமோஷனல் சென்டிமென்ட் கதைக்களத்தில் இந்த படத்தை தனுஷ் உருவாக்கி இருந்தார். கொஞ்சம் ஓவர் சென்டிமென்ட் என்று சொல்லப்பட்டாலும் படத்துக்கு காட்டு மொக்கை என்கிற அளவுக்கு நெகட்டிவ் விமர்சனம் கிடைக்கவில்லை. படம் ஓரளவுக்கு ஓடிவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் நேற்று காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான பிறகு இட்லி கடை படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வமும் கவனமும் மொத்தமாக காந்தாரா சாப்டர் 1 படம் பக்கம் திரும்பி விட்டது. காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக சாப்டர் 1 படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நாயகனாக நடித்திருக்கிறார். தமிழ் வெர்சனில் ரிஷப் ஷெட்டி நடிகர் மணிகண்டன் குரல் கொடுத்திருக்கிறார்.

கடவுளை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான இந்த படத்தின் பல காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களை அப்படியே மெய்சிலிர்க்க செய்திருக்கிறது. 1000 கோடி ரூபாய் வசூல் எல்லாம் அசால்ட்டாக அள்ளிவிடும் என்று படம் பார்த்த ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் இட்லி கடை படத்துக்கு ரசிகர்களின் வருகை 2 நாட்களில் வெகுவாக குறைந்துவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், இந்த விஷயத்தை கலாய்க்கும் விதமாக வடிவேலு காமெடி காட்சியை போட்டு மீம்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் ரோட்டில் கார் வரும்போது ஒருவர் காந்தாரா போல ஓ என்று கத்துவது போலவும் கால்வாய் தண்ணிக்குள் விழுந்த வடிவேலு அடேய் இருடா இருடா என்று இட்லி கடை போல பதறும் காட்சியாக சித்திரித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீஸ் என்பதால் இட்லி கடை படத்தை கடந்த 1ம் தேதி வெளியிட தனுஷ் முன்வந்துள்ளார். ஆனால் அடுத்த நாளே காந்தாரா சாப்டர் 1 வெளியாகி இட்லி கடை படத்தின் வசூலுக்கு ஆப்பு வைத்து விட்டது. இட்லி கடைக்கு இப்படி நடிகர் ரிஷப் ஷெட்டி பூட்டு வாங்கி வருவார் என்று நடிகர் தனுஷ் எதிர்பார்த்திருக்கவே மாட்டார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்