விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா, இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான பின்பு கேபிஒய் பாலா என்றுதான் அழைக்கப்படுகிறார். தொடர்ந்து டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி வரும் கேபிஒய் பாலா இப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
முதலில் சின்ன சின்ன கேரக்டர்களில் சினிமாவில் நடித்து வந்த கேபிஒய் பாலா இப்போது கதாநாயகனாக நடிக்க தொடங்கி இருக்கிறார். தனது சம்பளத்தில் பெரும் பகுதியை மக்களுக்கு உதவி செய்து வரும் கேபிஒய் பாலாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரும் புகழும் கிடைத்திருக்கிறது. டிவி நிகழ்ச்சிகள், திரைப்படம் மற்றும் ஆல்பம் வீடியோ பாடல்களில் கவனம் செலுத்தி வரும் அவர் இப்போது நடிப்பில் தீவிரமாக இருந்து வருகிறார்.
கேபிஒய் பாலாவின் ஒன்லைனில் காமெடி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு திரைப்படக் கலைஞராக மட்டுமின்றி சமூக சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. சத்தியமங்கலம் மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தவர் கேபிஒய் பாலா.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசதியற்ற துணை நடிகர்கள் பலருக்கும் தன்னால் ஆன உதவியை செய்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது, கல்லூரி விழாக்களில் பங்கேற்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என பிஸியாக இருக்கும் கேபிஒய் பாலா ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மாற்றம் என்ற சேவை அமைப்பில் இணைந்து உதவிகள் செய்து வருகிறார்.
இயக்குனர் ஷெரீப் இயக்கத்தில் உருவாக உருவான காந்தி கண்ணாடி என்ற படத்தில் கேபிஒய் பாலா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். நடிகர் வைபவ் நடித்த 25வது படம் ரணம் அறம் தவறேல் என்ற படத்தை இயக்குனர் ஷெரீப் இயக்கியிருக்கிறார். இப்போது அடுத்ததாக கேபிஒய் பாலா நடிக்கும் காந்தி கண்ணாடி என்ற படத்தை ஷெரீப் டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். காந்தி கண்ணாடி படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் காந்தி கண்ணாடி. இதன் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுவரை சின்னத்திரை நடிகராக வலம் வந்த கேபிஒய் பாலா இப்போது கதாநாயகனாக முதன்முதலாக காந்தி கண்ணாடி படத்தில் அறிமுகமாகிறார். வருகிற செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேலுவும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.





