- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா வீட்டுக்கு மருமகளா போயிருக்க வேண்டியவ நான் - கொளுத்திப் போட்ட வனிதா விஜயகுமார், அதுக்கு...

இளையராஜா வீட்டுக்கு மருமகளா போயிருக்க வேண்டியவ நான் – கொளுத்திப் போட்ட வனிதா விஜயகுமார், அதுக்கு கங்கை அமரன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

- Advertisement -

நடிகை வனிதா விஜயகுமார் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படம் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 தினங்களுக்கு முன் இந்த படம் வெளியான நிலையில், அடல்ட் கண்டென்ட் நிறைந்த ஒரு படமாக இந்த படம் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்த படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல் ரூபிணி நடித்த ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு என்ற பாடலை , இயக்குனர் வனிதா விஜயகுமார் பயன்படுத்தி இருக்கிறார்.

தனது இசையில் உருவான பாடல்களை படத்தில் பயன்படுத்த தனது அனுமதி பெற வேண்டும் என்று ஏற்கனவே இசைஞானி இளையராஜா போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், ராத்திரி சிவராத்திரி பாடலை பயன்படுத்த இளையராஜாவை அவரது இல்லத்தில், தனது மகள் ஜோவிகாவுடன் நேரில் சந்தித்து அனுமதி கேட்டிருக்கிறார். இசைஞானியும் ஓகே தான் சொல்லியிருக்கிறார்.

ஆனால் படம் வெளியான பிறகு, தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக இளையராஜா, மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் டைரக்டர் வனிதா விஜயகுமார் மீது வழக்குப் போடுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இளையராஜா தெய்வம் போன்றவர். அந்த தெய்வமே என் மீது கோபப்பட்டால் நான் எங்கே போவது? இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியவ நான் என்றும் அழுதபடி வனிதா விஜயகுமார் கூறியிருந்தார்.

இப்படி அவர் கூறியதால், இளையராஜாவுக்கு 2 மகன்கள் ஒரு மகள்தான். அதில் பவதாரணி மறைந்து விட்டார். கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருவரும்தான் உள்ளனர். இதில் கார்த்திக் ராஜா தான் மூத்தவர். அவருக்கும் வனிதா விஜயகுமாருக்கும் காதல் என்றோ திருமணம் என்றோ எப்போதுமே தகவல் வெளியானதே இல்லையே. அதுமட்டுமின்றி வனிதா விஜயகுமார் 3 முறை திருமணம் செய்து கணவர்களை விவாகரத்து செய்தவர் ஆச்சே என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வனிதா விஜயகுமார், இப்படி கூறியது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் இளையராஜாவின் தம்பி, இசையமைப்பாளர் கங்கை அமரனை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இதற்கு கங்கை அமரன் கூறுகையில், அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. இந்த பொண்ணு ஏன் இப்படி பேசாறங்கன்னே தெரியலே. ஏதோ தவறாக இருக்கிறது, என்று மட்டும் கூறியிருக்கிறார். அப்படி என்றால், சும்மா கொளுத்திப் போட்டாரா வனிதா விஜயகுமார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்