- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி - எம்எல்ஏ ஆனால் அப்படி ஒரு...

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி – எம்எல்ஏ ஆனால் அப்படி ஒரு அதிரடியை செய்வாரா? அவரே சொன்ன விளக்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. இப்போது மதுரை மத்திய தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுகவின் முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பிரபல இயக்குனராக நடிகராக வலம் வரும் இயக்குனர் சுந்தர் சியும், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த வாய்ப்பை சுந்தர் சிக்கு ஏசி சண்முகம் தந்திருக்கிறார். மேலும் பாஜக வில் மாநில துணைத்தலைவராக குஷ்பு இருப்பதால் தனது கணவர் சுந்தர் சிக்கு இந்த வாய்ப்பை அவர் பெற்றுத் தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் ஜெயித்து எம்எல்ஏ வாக ஆகி விட்டால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள இறைச்சி கடைகளை எல்லாம் அகற்றி விடுவேன் என்று கூறியதாக ஒரு தகவல் வெளியானது. இது ஒரு தரப்பில் வரவேற்பை பெற்றாலும் ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, நான் சென்னைக்காரன், மதுரையில் போட்டியிடுவதாக சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இந்த தேர்தலில் திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் அந்தந்த ஊர்களை தொகுதிகளை சேர்ந்தவர்களா என்றால் அது இல்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

திமுக கூட்டணியில் விருதுநகரில் அன்பு தம்பி விஜய பிரபாகரன் விருதுநகரில் போட்டியிடுகிறார். அது அவரோட தொகுதியா? என் மீது இப்படி முதலில் புகார் சொன்ன கனிமொழி தூத்துக்குடி தொகுதியா? தமிழக முதல்வர் கொளத்தூரில் நிற்கிறார். அது அவரோட தொகுதியா? துணை முதல்வர் உதயநிதி சேப்பாக்கத்தில் நிற்கிறார். அது அவரோட தொகுதியா?

அப்படி எல்லாம் கிடையாது. இல்லாத வதந்திகளை அவதூறுகளை என் மீது பரப்புகிறார்கள். நான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி இருக்கிற கறிக்கடைகளை எல்லாம் மூடுவேன் என்று சொன்னதாக வதந்தி பரப்பினார்கள். அதுவும் பொய் என்று ஆகி விட்டது. என் மடியில் கணம் இல்லை. வழியில் பயம் இல்லை. இந்த அவதூறு வதந்திகளை யாரும் நம்பாதீங்க என்று சுந்தர் சி அப்போது கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்