- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் நடித்த படம் என்றால் நாங்கள் விட்டுவிட வேண்டுமா? அதெல்லாம் தெரியாது, எங்களுக்கு அந்த...

அஜீத் நடித்த படம் என்றால் நாங்கள் விட்டுவிட வேண்டுமா? அதெல்லாம் தெரியாது, எங்களுக்கு அந்த ஆசையும் கிடையாது – விளாசித் தள்ளிய கங்கை அமரன்!

- Advertisement -

சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூவா தாரேன் இளமை இதோ இதோ என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்கள் இருந்தன.இந்த பாடல்களை தனது அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தியதற்காக இளையராஜா, படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்காக உரிய நிறுவனங்களிடம் முறையாக அனுமதி பெற்றதாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியிருப்பதாவது, கதை எழுதும் கதை ஆசிரியருக்கு அந்த கதை எத்தனை மொழிக்கு சென்றாலும் அதில் அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் பாட்டுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது. காரணம் என்னவென்றால் அது தனி படைப்பு. என்னுடைய அண்ணன் இளையராஜா எந்த படமானாலும் அதனுடைய இசை உரிமையை வாங்கிக் கொள்வார்.

- Advertisement -

இளையராஜாவின் இசையமைத்த பாடல்களை எஸ் பி பாலசுப்ரமணியம் மேடையில் பாடுவதற்கு அவர் தடை கேட்ட நிலையில், அதுகுறித்து நான் இளையராஜாவிடம் மிகவும் சண்டை போட்டேன். அதன் பின்னர் எஸ்பிபி மேடைகளில் தன்னுடைய பாடல்களை பாடுவதற்கு இளையராஜா தடை போடவில்லை.

நீங்கள் 7 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஒரு மியூசிக் டைரக்டரை வைத்திருக்கிறீர்கள். அவர் போட்ட பாட்டுக்கு கைதட்டல் வராமல் இளையராஜா போட்ட பாட்டுக்கு ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். அப்படி இருக்கும்போது அதற்கான கூலி எங்களுக்கு வரவேண்டும். எங்களுடைய பெயரை போடாமல் இன்னொரு மியூசிக் டைரக்டருக்கு அத்தனை கோடிகளை கொடுத்தும் அவரால் நாங்கள் கொடுத்த இசையை கொண்டு வர முடியவில்லை. அப்படியானால் அதில் எங்களுக்கு பங்கு இருக்கிறது.

- Advertisement -

நீங்கள் எங்களிடம் அனுமதி கேட்டால் நிச்சயமாக இளையராஜா இலவசமாகவே அனுமதி கொடுத்து விடுவார். அவரிடம் அனுமதி வாங்காமல் போட்டதால்தான் அவருக்கு கோபம் வருகிறது அதனால் தான் அவர் சண்டையிடுகிறார் இதில் இளையராஜாவுக்கு பணத்தாசை எல்லாம் கிடையாது எங்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. அது அஜீத்குமார் படம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. அது எங்களுடைய பாட்டு அவ்வளவுதான்.

உன்னுடைய மியூசிக் டைரக்டரால் அப்படியான இசையை கொடுக்க முடியவில்லை. எங்களுடைய பாடல்கள் தான் படத்தை ஜெயிக்க வைக்கிறது. அதற்கு நீங்கள் முன்பே அனுமதி வாங்கியிருந்தால் நாங்கள் சந்தோஷமாக அதனை கொடுத்து இருப்போம். என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய சொத்தை எப்படி பயன்படுத்தலாம் அந்த கோபம் தானே தவிர அது வேறொன்றுமில்லை என்று கங்கை அமரன் ஆவேசமாக பேசியது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்