- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்தானம் படத்திற்காக கடற்கரை மண்ணில் காக்க காக்க பாடலுக்கு ஓடும் கௌதம் மேனன்... அதன் பின்னால்...

சந்தானம் படத்திற்காக கடற்கரை மண்ணில் காக்க காக்க பாடலுக்கு ஓடும் கௌதம் மேனன்… அதன் பின்னால் இப்படி ஒரு பிளாஷ் பேக் இருக்குதா… பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்ப்பா…

- Advertisement -

நகைச்சுவை நடிகரில் இருந்து கதாநாயகனாக மாறிய சந்தானத்திற்கு நடுவே வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்தன. இப்படியான சூழலில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம்தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. ஹாரர் கலந்த காமெடி படமாக எடுக்கப்பட்ட அது, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து வடக்குப்பட்டி ராமசாமி என்னும் திரைப்படத்திலும் சந்தானம் நடித்தார். இதுவும் அவருக்கு நல்ல ஒரு விமர்சனத்தையே கொடுத்தது. தற்போது டிடி ரிட்டன்ஸ் என்னும் திரைப்படத்தின் நடித்து முடித்திருக்கிறார் சந்தானம்.

- Advertisement -

ஆர்யாவின் தயாரிப்பில் இது எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கிய இயக்குனர்களான செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இதுபோக யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஹீரோயின்களும் படத்தில் இருக்கின்றனர். பிரேம் ஆனந்த் என்பவர் இதனை இயக்கி இருக்கிறார்.

இதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வழக்கம் போல நகைச்சுவைக்கு படத்தில் அதிக ஸ்கோப் இருப்பது அதன் ட்ரைலரை பார்க்கும்போது தெரிந்தது. இதில் செல்வராகவன் கோஸ்ட் கதாபாத்திரத்தில் வருகிறார். யாருமே எதிர்பார்க்காத வகையில் கௌதம் மேனனுக்கு இதில் நகைச்சுவை கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அவரும் தான் இயக்கிய காக்க காக்க திரைப்படத்திலிருந்து உயிரின் உயிரே பாடலுக்கு கடற்கரையில் சூர்யா போல் ஓடி வருகிறார். இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் ஆச்சரியமடைந்தனர். சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர். எப்படி இருந்த இயக்குனர் சற்றென்று இப்படி மாறிவிட்டாரே என்று அவர்கள் கமெண்ட் அடித்தனர்.

இந்த நிலையில், சந்தானம் திரைப்படத்தில் நடிப்பது குறித்து கௌதம் மேனன் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஒருமுறை சந்தானம் என்னிடம் வந்து, சார் நான் கால்சீட் இல்லாதப்போ உங்களுக்காக நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நடித்தேன். இப்போது எனக்காக இந்த திரைப்படத்தில் பண்ணுங்கள் என்று கேட்டார். அதனால் நட்புக்காக தான் இதனை செய்தேன். ஆனாலும் என்ஜாய் பண்ணி செய்தேன் என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்