- Advertisement -
Homeபொழுதுபோக்குதெலுங்கில் அப்படி ஒரு கேரக்டரில் நானியுடன் நடிக்கிறேன்…. நடிகை கயாடு லோஹர் சொன்ன தகவல் -...

தெலுங்கில் அப்படி ஒரு கேரக்டரில் நானியுடன் நடிக்கிறேன்…. நடிகை கயாடு லோஹர் சொன்ன தகவல் – இந்த ரிஸ்க் தேவையா என புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

சினிமாவில் புதுமுகமாக அறிமுகமாகி வளரும் காலத்தில் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். அப்படி சரியான கேரக்டர்களை சரியான கதைகளை தேர்வு செய்து நடித்தால் மட்டுமே அடுத்தடுத்த நகர்வுகளுக்கு செல்ல முடியும். ரசிகர்களிடம் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியும்.

இந்த விஷயத்தில் தடுமாறும் சில நடிகர்கள் நடிகைகள் தவறான முடிவுகளை எடுத்து தனக்கு பொருந்தாத கதைகளில், கேரக்டர்களில் நடித்து மிக விரைவிலேயே காணாமல் போய்விடுகின்றனர். அதனால் வளரும் கலைஞர்களாக இருப்பவர்கள், ஆரம்பத்தில் தங்களது அஸ்திவாரத்தை பலமாக போட்டுக்கொள்வது மிகவும் கட்டாயமாகும்.

- Advertisement -

அந்த வரிசையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்தவர் கயாடு லோஹர். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்த நிலையில், தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன. இதுதவிர தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு வருகிறது.

டிராகன் படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வாவுடன் இதயம் முரளி என்ற படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். சிம்பு நடிக்கும் ஒரு படம் தனுஷ் நடிக்கும் ஒரு படம் என நாயகியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். மற்றும் சில படங்களில் நாயகியாக நடிக்க கயாடு லோஹரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

- Advertisement -

மேலும் தெலுங்கில் முன்னணி நடிகராக நானியுடன் ஒரு படத்தில் நடிக்க கயாடு லோஹர் கமிட் ஆகியிருக்கிறார். ஏற்கனவே தெலுங்கில் நடிகர் ஸ்ரீ விஷ்ணுவுடன் அல்லூரி என்ற படத்தில் நாயகியாக கயாடு லோஹர் நடித்த நிலையில் இப்போது 2வது படமாக நானியுடன் அவர் தி பாரடைஸ் என்ற படத்தில் நடிக்கிறார்.

மேலும் தி பாரடைஸ் படத்தில் கயாடு லோஹருக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் என்றும் விலைமாது கேரக்டரில் அவர் நடித்து வருவதாகவும் அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். மேலும் இந்த படமும் இந்த கேரக்டரும் எனக்கு தெலுங்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று கூறியிருக்கிறார். இப்போதான் நடிக்கவே ஆரம்பிச்சிருக்கீங்க, அதுக்குள்ள இப்படி ஒரு ரிஸ்க் தேவையா என அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்