நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. 2 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இந்த படம் ஒருவழியாக வரும் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பொங்கலில் வர வேண்டிய இந்த படம், 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு பின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இப்போது பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை பொருத்த வரை, இயக்குனர் மகிழ் திருமேனி காட்டிய அலட்சியம், சரியான நேரத்தில் நிதி தராமல் நிர்வாகத்தில் சுணக்கம் காட்டிய லைகா நிறுவனம், பனிப்புயல் கனமழை கடும்குளிர் போன்ற பல காரணங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிக்கலை ஏற்படுத்தியது.
படத்தின் பெயரை போலவே விடாமுயற்சியாக போராடி போராடி கடைசியாக வருகிற பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டு அந்த படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
விடாமுயற்சி குட்பேட் அக்லி 2 படங்களையுமே டிஜிட்டல் ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் நிறுவனம்தான் வாங்கியிருக்கிறது. அதே போல் சூர்யா நடிப்பில் மே 1ம் தேதி வெளியாகும் ரெட்ரோ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்தான் வாங்கியுள்ளது.
விடாமுயற்சி ரிலீசான பிறகு 8 வாரங்கள் கழித்து, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அந்த படத்தை திரையிட வேண்டும். அடுத்து மே 1ம் தேதி ரெட்ரோ ரிலீசான பிறகு 8 வாரங்கள் கழித்து நெட்பிளிக்ஸ் தளத்தில் திரையிட வேண்டும். அதே போல் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகும் குட் பேட் அக்லி படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் திரையிடப்பட வேண்டும்.
இந்த சூழலில் பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி, அடுத்த 2 மாதங்களில் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி ரிலீஸ் செய்தால், விடாமுயற்சி படத்தில் ஓடிடி தளத்தில் திரையிடுவதில் போதிய லாபம் கிடைக்காது. அதே போல் குட் பேட் அக்லி படத்தையும் உடனே 8 வாரங்களில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட்டாலும் வருமான இழப்பு ஏற்படும். இதற்கிடையே ரெட்ரோ படமும் உள்ளதால், குட்பேட் அக்லி படம் ரிலீஸை தள்ளி வைக்குமாறு, நெட்பிளிக்ஸ் நிறுவனம், படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இ மெயில் அனுப்பியுள்ளது.





