- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அட்லி படத்தின் சூட்டிங் நடக்கப்போவது இந்த ஊர்ல தான்... அதோட கொஞ்சம் முக்கியமான...

குட் பேட் அட்லி படத்தின் சூட்டிங் நடக்கப்போவது இந்த ஊர்ல தான்… அதோட கொஞ்சம் முக்கியமான தகவலும் வெளியே வந்திருக்கு பாருங்க…

- Advertisement -

நடிகர் அஜித்தை இயக்கும் அரிய வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷா இல்லனா நயன்தாரா என்னும் திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். முதல் திரைப்படத்திலேயே, இளைஞர்களைக் கவரும் திரைப்படம் எனக்கூறி ஆபாச வார்த்தைகளில் அந்த படம் எடுக்கப்படுகிறது.

பெரும் சர்ச்சையை அந்த திரைப்படம் ஏற்படுத்தி இருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தை அவர் எடுத்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பகிரா படத்தை எடுத்தும் தோல்வியடைந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படியான சூழலில் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது மார்க் ஆண்டனி திரைப்படம். விஷால் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு எஸ் ஜே சூர்யா வின் நடிப்பு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது. அதேபோல் சிக்கலான டைம் டிராவல் கதையை கையில் எடுத்து, திரைக்கதையை நீட்டாக கொடுத்ததற்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பாராட்டப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் தனது அடுத்த திரைப்படத்திற்காக அவர் அஜித்குமார் உடன் இணைந்து இருக்கிறார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் போது அஜித்திடம் அவருக்கு நல்ல ஒரு பழக்கம் ஏற்பட்டது. இதன்பிறகு ஒரு கதையை அவரிடம் கூற, அதுவும் அஜித்திற்கு பிடித்து போனதால் தற்போது அது படமாக உருவாகிறது. இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் எடுக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீரம் திரைப்படத்தை தொடர்ந்து அஜித் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் முதல் கட்ட படப்பிடிப்பை ஜப்பானில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்