- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் - தரமான ஓஜி சம்பவம்...

குட் பேட் அக்லி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் – தரமான ஓஜி சம்பவம் செய்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விடாமுயற்சி. இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் ரூ. 200 கோடி வரை படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்டது.

அதன்பிறகு நடிகர் அஜீத்குமார் நடித்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட்பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து, இந்த படத்திலும் திரிஷா தான் நாயகியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமாருக்கு விடாமுயற்சி படம் பலத்த ஏமாற்றத்தை தந்த நிலையில் குட்பேட் அக்லி படம் தரமான சம்பவம் செய்ய காத்திருப்பதாக ரசிகர்கள் இப்போதே கூறி வருகின்றனர். கடந்த வாரத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களை அப்படி சொல்ல வைத்திருக்கிறது. ஏனெனில் டீசரில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜீத்குமாரை செம மாஸாக காட்டியிருந்தார்.

மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜீத்குமாரின் ரசிகர் என்பதை விட வெறியர் என்று சொல்லும் அளவுக்கு அவர் மீது தீவிர பற்றுள்ள ரசிகராக இருக்கிறார். அதனால் குட் பேட் அக்லி படத்தை வேற லெவலில் அவர் டைரக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. டீசர் மட்டுமே 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் குட் பேட் அக்லி படத்தின் பிரமோசன் பணிகளை படக்குழு துவங்கிய நிலையில் நேற்றிரவு குட் பேட் அக்லி படத்தில் இருந்து ஓஜி சம்பவம் என்ற முதல் பாடல் ரிலீஸானது. இந்த பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாருடன் இணைந்து படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனும் பாடியிருக்கிறார். இது ஏகே ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இந்த பாடல் காட்சியில் இடையிடையே அஜீத்குமார் பேசும் பஞ்ச் டயலாக்குகளும் இடம்பிடித்துள்ளன. கேஜிஎப் படத்தில் இடம்பெற்ற தீரா தீரா என்ற பாடலை போன்ற ஒரு சாயலில் இந்த பாடல் இருப்பதாக ரசிகர்களிடையே விமர்சனம் எழுந்துள்ளது. எனினும் தரமான சம்பவமாக இந்த பாடல் இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பாடலை காண இங்கே கிளிக் செய்யவும்;https://youtu.be/kuZ-6jd82Go?si=MEFxueyoNJD1Wve0

- Advertisement -

சற்று முன்