- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிரி புதிரியான நடிப்பில் ரசிகர்களை தெறிக்க விட்ட நடிகர் அஜீத்குமார் - 2 நாட்களில் குட்...

அதிரி புதிரியான நடிப்பில் ரசிகர்களை தெறிக்க விட்ட நடிகர் அஜீத்குமார் – 2 நாட்களில் குட் பேட் அக்லி படம் வசூல் நிலவரம்!

- Advertisement -

விடாமுயற்சி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்ததாக அஜீத்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நாயகியாக திரிஷாவே நடித்திருக்கிறார்.

திரிஷா இல்லேன்னா நயன்தாரா அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மார்க் ஆண்டனி படங்களை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி படம். இந்த படத்தை பொருத்த வரை இது ஒரு ரசிகர், தனது அபிமான நடிகரை தன் ஆசைப்படி எடுத்த ஒரு படமாகும்.

- Advertisement -

அதாவது அஜீத்குமாரை அவரது விருப்பத்திற்காக மட்டுமே இந்த படத்தின் காட்சிக்கு காட்சி மாஸ் ஆக காட்டும் ஒரு கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார். படத்தின் கதை திரைக்கதை என்ற லாஜிக் எல்லாம் கடந்து இந்த படம் ஒரு மாஸ் ஹீரோவின் புகழ் பாடும் பாராட்டும் ஒரு படைப்பாகவே மட்டுமே இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கி தந்திருக்கிறார்.

அதனால் படம் பார்த்த ரசிகர்கள் வேற லெவல் வேற லெவல் என புகழ்பாடி உற்சாகமாக கூறுகின்றனர். ஆனால் பழைய பாடல்களை எல்லாம் படத்தில் மொத்தமாக போட்டு வாலி தீனா பில்லா அமர்க்களம் படங்களை எல்லாம் ரெபரென்ஸ் என்ற பெயரில் உள்ளே இறக்கி இந்த படத்தை பழைய படங்களில் ஒரு புதிய தொகுப்பாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார் என்றும் பொதுவான விமர்சனம் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரிலீஸான இந்த படம் மொத்தம் 30.9 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியானது. ஆனால் வலிமை படம் ரூ. 31 கோடி முதல் நாளில் வசூலித்த நிலையில் அந்த சாதனையை குட் பேட் அக்லி படம் முறியடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. எனினும் தியேட்டர்களில் ஏகே ரசிகர்களின் கூட்டம் குவிந்து வருகிறது.

மேலும் அஜீத்குமார் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் குட் பேட் அக்லி படத்தை பார்க்க ஆர்வமாக வருகின்றனர். அதே நேரத்தில் இந்த படத்தை அவர்கள் பாராட்ட காரணம், வருகிற தேர்தலில் விஜய்க்கு அஜீத்குமாரின் ரசிகர்கள் ஆதரவு தேவை என்ற காரணமும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே 2வது நாளில் குட் பேட் அக்லி படத்தின் வசூல் ரூ. 90 கோடியை கடந்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்