- Advertisement -
Homeபொழுதுபோக்குவாயில் சுருட்டு... கையில் அருவாள் என ஆக்ரோஷமாக காட்சி அளிக்கும் அனுஷ்கா... எங்க போய் முடியப்...

வாயில் சுருட்டு… கையில் அருவாள் என ஆக்ரோஷமாக காட்சி அளிக்கும் அனுஷ்கா… எங்க போய் முடியப் போகுதோ என பதறும் ரசிகர்கள்…

- Advertisement -

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. ஆந்திராவை சேர்ந்த அவர், தமிழில் வெளியான ரெண்டு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கத்தில் மாதவன் நடித்திருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அது அனுஷ்காவுக்கு நல்ல என்ட்ரி ஆகவும் அமையவில்லை.

 

- Advertisement -

பிறகு தொடர்ந்து முயற்சி செய்து வந்த நடிகைக்கு, வேட்டைக்காரன் திரைப்படத்தின் மூலம் விஜயுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அனுஷ்கா. இங்கிருந்து அவருக்கு தமிழ் சினிமாவில் பயணம் தொடங்கியது. முன்னாடி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.

 

- Advertisement -

அஜித்துடன் என்னை அறிந்தால், சூர்யாவுடன் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் என அனுஷ்கா முன்னணி நடிகையாகவே வலம் வந்தார். இதேபோல் ரஜினியுடன் இணைந்து அவர் லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரது திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது அருந்ததி தான்.

 

தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டது. ஆனால் அதில் எந்தவித உறுத்தலும் இல்லாமல், சரியான காட்சி அமைப்புகள் இருந்ததால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது வெளியாகும் ஹாரர் திரைப்படங்களுக்கு மையப்புள்ளியே அருந்ததி திரைப்படம் தான் என்று கூறலாம்.

 

இந்த நிலையில் அவர் ஆர்யாவுடன் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்னும் திரைப்படத்தில் நடித்தார். இது தமிழில் இஞ்சி இடுப்பழகி என்னும் பெயரில் வெளியானது. உடல் பருமனான ஒரு பெண் அதன் மூலம் எந்த அளவு கஷ்டப்படுகிறார் என்பதை தான் இந்த திரைப்படம் விளக்கி இருக்கும். இந்த திரைப்படம்தான் அனுஷ்கா வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது.

 

படத்திற்காக உடல் பருமனை கூட்டிய அவர் அதனை குறைப்பதற்கு மிகுந்த சிரமம் அடைந்தார். இந்த இடைவேளையில் அவருக்கு பட வாய்ப்புகளும் பறிபோனது. இப்படியான சூழலில் தான் அவர் மீண்டும் காட்டி என்னும் திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுக்க இருக்கிறார். க்ரிஷ் ஜகர்லாமுடி இயக்கும் இத திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட திரையரங்குகளில் எடுக்கப்பட்டுள்ளது. முதல் காட்சியிலேயே கையில் அரிவாளுடன் ஒரு நபரை பேருந்தில் வெட்டிக் கொள்ளும் ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் அனுஷ்கா வருகிறார். இதை டீசரை பார்த்து பலரும் இரண்டு போயிருக்கிறார்கள். அவர் சுருட்டு புகைப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்