நடிகை விசித்ரா பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அவர் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக தான் பல படங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வில்லாதி வில்லன், முத்து, பெரியகுடும்பம், அமைதிப்படை போன்ற படங்களில் அவர் ரசிகர்களை கவரும் விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
திருமணத்துக்கு பின் பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த விசித்ரா, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7ல் பங்கேற்றார். வீட்டுக்குள் அதிக நாட்கள் இருந்த விசித்ராவுக்கு இந்தமுறை டைட்டில் வின்னர் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில், அவர் 90 நாட்களை கடந்து வெளியேற்றப்பட்டார். பிறகு சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது 2001ம் ஆண்டில் கேரளா, மலம்புழாவில் நடந்த தெலுங்கு பட ஷூட்டிங்கில் தனக்கு நேர்ந்த கசப்பான அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். அந்த தெலுங்கு நடிகர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணா என்பது தெரிய வந்து, சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த சம்பவம் தொடர்பான மத்த விஷயங்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இதில் நடிகர் சங்க தலைவரான ராதாரவியும் விமர்சனத்தில் சிக்கினார்.
இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் விசித்ரா கலந்துக்கொண்டார். தொடர்ந்து யூடியூப் சேனல்களில் நேர்காணல் கலந்துக்கொண்டு வருகிறார். அவரது கணவர், மகன்கள் எல்லாம் கேரளாவில் உள்ளனர். கேரளாவில் செட்டில் ஆகிவிட்ட விசித்ரா, தொடர்ந்து சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலான விஷயங்களை பேசி வருகிறார். இப்போது நடிகர் கவுண்டமணி குறித்த ஒரு விஷயத்தை அவர் கூறியிருக்கிறார்.
நான் நடிகர் கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறேன். நல்லவிதமாக தான் எல்லாம் போய்க்கொண்டு இருந்தது. பெரிய குடும்பம் என்ற படத்தில் நடிக்க இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் எனக்கு வாய்ப்பளித்தார். அந்த படத்தின் துவக்கவிழா பூஜையில் நான் கலந்துக்கொண்டேன். அப்போது டைரக்டர் என்னை வந்து அழைத்து, கவுண்டமணி சாருக்கு நீ வணக்கம் சொல்ல வேண்டும், என்றார். எதற்கு சார் என்றேன். நீ வந்து ஒரு வணக்கம் மட்டும் சொல்லு, என்று என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்.
இந்த படத்தில் நடிப்பதற்கும், இந்த வணக்கத்துக்கும் எந்த சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை. என்றாலும் டைரக்டர் சொன்னபடி கவுண்டமணிக்கு வணக்கம் சொன்னேன். இப்போதான் வணக்கம் சொல்வீங்களா, என கேட்டார். அவர் ஏன் அப்படி பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஆனால் சினிமாவில் இதெல்லாம் சகஜம், என்று விசித்ரா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





