நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஜெய்லர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காவலா பாடலும், ஹூக்கும் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காவலா பாட்டு ஹிட்டானதற்கு முக்கிய காரணம் தமன்னா தான். இளசுகள் மத்தியில் ரீல்ஸ் ஆக அந்த பாடல் பறக்குகிறது.
ஆனால் இரண்டாவது பாடல் ஹிட்டானதற்கு காரணம் பாடலாசிரியர் சூப்பர் சுப்புவின் வரிகள் தான். ரஜினியை ஓவராக புகழ்ந்து எழுதிய சூப்பர் சுப்பு மற்ற ஹீரோக்களின் ரசிகர்களை வம்பிழுக்கும் விதமாக பாடல் வரிகளை வைத்திருந்தார்.
இது சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் சூப்பர் சூப்புவை கொண்டாடி வருகின்றனர். பலரும் யாருய்யா இவரு என்று தேடி வருகின்றனர். இதனால் சூப்பர் சூப்புக்கு ஒரு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.
அதன்படி சூப்பர் சுப்பு ஏற்கனவே சுட்ட கதை என்ற படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். அது பெருமளவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதன் பிறகு தாராள பிரபு போன்ற படங்களுக்கு வசனமும் பாடலையும் எழுதி இருக்கிறார். கோடியில் ஒருவன் படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்லம் ஆந்தம் என்ற பாடலையும் அவர் எழுதியிருக்கிறார்.
ஆனால் அவருக்கு பெரிய பிரேக் ஜெய்லர் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க சூப்பர் சுப்புக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சூப்பர் சுப்பு ஒரு இயக்குனர் என்று தெரிந்தவுடன் பலரும் அவரை அழைத்து ரஜினி போன்ற நடிகருக்கு என்ன கதை வைத்துள்ளீர்கள் என தயாரிப்பாளர்கள் கேட்டிருக்கிறார்களாம்.
இதனால் தனது குடோனில் வைத்திருந்த பல கதைகளையும் எடுத்துக்கொண்டு சூப்பர் சுப்பு மீண்டும் இயக்குனர் என்ற தொப்பியை போட ரெடியாகிவிட்டாராம். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜெயிலர் படத்தின் மூலம் சூப்பர் சுப்புவுக்கு இரண்டாவது முறையாக நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் இதனை அவர் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் ரஜினி ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சூப்பர் சுப்பு தமக்கு எழுந்த எதிர்ப்பை மனதில் வைத்துக் கொண்டு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்பது தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தொலைக்காட்சி நேர்காணலில் கூறியிருந்தது சில ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் இவர் மீது கோபத்தில் இருந்த விஜய் ரசிகர்களும் தற்போது சாந்தமாகி விட்டார்கள்.





