- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதன்முறையாக வெப் சீரிஸில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்குமார், இதை இயக்கப் போற டைரக்டர் யாரு தெரியுமா?...

முதன்முறையாக வெப் சீரிஸில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்குமார், இதை இயக்கப் போற டைரக்டர் யாரு தெரியுமா? – அட இவர் நடிப்பில் பெரிய மகாராஜாவாச்சே?

- Advertisement -

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ்குமார். இவர், இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாமா வழியில் இல்லாமல், வித்யாசமான இசையை தந்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஜிவி பிரகாஷ்குமார்.

ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், தெறி, தலைவா, ராஜா ராணி என ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இசையில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை முன்னணி இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார் தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் நேற்று வெளியான தங்கலான் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கும் ஜிவி பிரகாஷ்குமார்தான் இசையமைத்துள்ளார். படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து நடிப்பிலும் ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷா இல்லைனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை, குப்பத்து ராஜா, டார்லிங், ஐங்கரன், ஜெயில், நாச்சியார், செல்பி, அடியே, ரெபல், செம என பல படங்களில் நடித்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகவும், ஜிவி பிரகாஷ் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய படங்களாகவும் இருக்கின்றன. இந்நிலையில், இந்தியிலும் படங்களுக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.

- Advertisement -

இந்தியில் பிரபல இயக்குனராக உள்ளவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர். லியோ படத்தில் ஒரு நிமிடம் மட்டுமே கேமியோ ரோலில் வந்து செல்வார். சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில், வில்லனாக நடித்து ரசிகர்களை அசத்தியிருப்பார் அனுராக் காஷ்யப்.

இப்போது இந்தியில் அனுராக் காஷ்யப், வெப் சீரிஸ் ஒன்றை டைரக்ட் செய்கிறார். இந்த வெப் சீரிஸ் 8 பாகங்களாக உருவாக்கப்படுகிறது. இந்த வெப் சீரிஸில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ்குமார் நடிக்க உள்ளார். தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த த்ரில்லிங் வெப் சீரிஸ் பிரபல ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அனுராக் காஷ்யப் இயக்கிய படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ்குமார், அவரது இயக்கத்தில் வெப் சீரிஸில் முதன்முறையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்